ADDED : பிப் 16, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்மஞ்சேரிசெம்மஞ்சேரி, சுனாமி நகரைச் சேர்ந்த தேவராஜ், 55, அதே பகுதியில், மளிகை கடை நடத்தி வருகிறார். இரு தினங்களுக்கு முன், கடையின் பூட்டை உடைத்து, 25,000 ரூபாய் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் திருடப்பட்டன.
இதுகுறித்து வழக்குப் பதிந்த செம்மஞ்சேரி போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல், 19, ராஜதுரை, 25, ஜெயகுமார், 21, ஆகியோரை நேற்று கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்தனர்.