/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஹெராயின் வைத்திருந்த மூன்று வாலிபர்கள் கைது
/
ஹெராயின் வைத்திருந்த மூன்று வாலிபர்கள் கைது
ADDED : மார் 26, 2025 11:50 PM

மதுரவாயல், சென்னை பெருநகர காவல் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், மதுரவாயல் போலீசார் இணைந்து, வானகரம் ஆசிரியர் காலனி அருகே உள்ள பூங்காவை கண்காணித்து வந்தனர்.
அங்கு, சந்தேகத்திற்கிடமாக நின்ற மூவரை பிடித்து சோதனை செய்ததில், அவர்களிடம் ஹெராயின் போதை பொருள் இருந்தது தெரியவந்தது.
பிடிபட்டோர், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிப்ஜூர் ரஹ்மான், 34, அனருல் இஸ்லாம், 33, ரிங்கு போரா, 26, என்பது தெரிந்தது.
மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 3 கிராம் ஹெராயின், 50 கிராம் கஞ்சா மற்றும் 41 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
அனருல் இஸ்லாம் மீது, அடையாறு காவல் நிலையத்தில் போதை பொருள் வழக்கு உள்ளது.