/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருநின்றவூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மையம் திறப்பு
/
திருநின்றவூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மையம் திறப்பு
திருநின்றவூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மையம் திறப்பு
திருநின்றவூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மையம் திறப்பு
ADDED : நவ 28, 2024 12:35 AM

திருநின்றவூர், சென்னை புறநகரில் முக்கிய ரயில் நிலையமான திருநின்றவூர் ரயில் நிலையம் 1.5 கி.மீ., துாரம் கொண்டது. இந்த ரயில் நிலையத்தில் 5 நடைமேடைகள் 6 இருப்பு பாதைகள் உள்ளன.
இங்கு கோமதிபுரம், கொசவன்பாளையம், கொட்டாமேடு, புதுச்சத்திரம், திருமழிசை, நடுக்குத்தகை, பாக்கம் உட்பட 32 கிராமங்களைச் சேர்ந்த 60,000துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.
இங்குள்ள பயணச்சீட்டு முன்பதிவு மையம், கடந்த 8 ஆண்டுகளாக, ரயில்வே நடைமேம்பாலத்தில் செயல்பட்டு வந்தது.
முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணியர் 48 படிக்கட்டுகள் ஏறி இறங்கி, பயணச்சீட்டு பெற கடும் அவதிப்பட்டனர். இதனால், தரை தளத்தில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் அமைக்க வேண்டும் என, அனைவரும் கோரிக்கை வைத்தனர்.
அதன்படி, கடந்த ஆண்டு மார்ச் மாதம், 5வது நடைமேடையில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் முன்பதிவு மையம் அமைக்கும் பணிகள் துவங்கின. இந்த பணிகள் கடந்த வாரம் முடிந்தன.
இதையடுத்து, நடை மேம்பாலத்தில் இருந்து முன்பதிவு மையம், நேற்று முன்தினம் மாலை புது கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், '54ஏ' பேருந்து நிறுத்தம், முதல் நடைமேடை அருகே கூடுதலாக முன்பதிவு மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.