ADDED : பிப் 18, 2025 03:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர் : சென்னை, சூரப்பட்டைச் சேர்ந்தவர் ஹேமந்த், 19; எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவர். இவர், நேற்று முன்தினம் தன் நண்பர்கள் எட்டு பேருடன், எண்ணுார், சின்ன குப்பம் கடற்கரையில் குளிக்கச் சென்றார்.
குளிக்கும்போது, அலையில் சிக்கி ஹேமந்த் மாயமானார். மீனவர்கள் உதவியுடன் எண்ணுார் போலீசார் தேடினர். இந்நிலையில், நேற்று காலை அவரது உடல், அதே பகுதியில் கரை ஒதுங்கியது. போலீசார் விசாரிக்கின்றனர்.