சாய்ந்த 'சிசிடிவி' கேமரா கம்பம் பெருங்குடியில் விபத்து அபாயம்
சாய்ந்த 'சிசிடிவி' கேமரா கம்பம் பெருங்குடியில் விபத்து அபாயம்
ADDED : ஜூன் 29, 2026 12:52 AM

பெருங்குடி: பெருங்குடி ஓ.எம்.ஆர்., சாலையில், 'சிசிடிவி' கேமரா பொருத்துவதற்காக அமைக்கப்பட்ட இரும்பு கம்பம் சேதமடைந்து சாலையை நோக்கி சாய்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
சென்னை ஓ.எம்.ஆர்., சாலையின் பெருங்குடி பகுதியில், குற்றச் செயல்களைக் கண்காணிக்கவும், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும் இரும்பு கம்பம் நட்டு, அதில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
அந்த கம்பத்தில் எந்த 'சிசிடிவி' கேமரா வும் இல்லாத நிலையில், அதன் அடிப்பகுதி சேதமடைந்து சாலையை நோக்கி ஆபத்தான வகையில் சாய்ந்துள்ளது.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த இச்சாலையில் பலத்த காற்று வீசினாலோ அல்லது கனரக வாகனங்கள் லேசாக உரசினாலோ, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது கம்பம் விழுந்து, பெரும் விபத்தை ஏற்படுத்தக்கூடும்.
அசம்பாவிதம் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சாய்ந்த இரும்புக் கம்பத்தை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
