/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
13 சாலைகளில் நேர கட்டுப்பாடு இலகு ரக வாகனங்களுக்கு சலுகை
/
13 சாலைகளில் நேர கட்டுப்பாடு இலகு ரக வாகனங்களுக்கு சலுகை
13 சாலைகளில் நேர கட்டுப்பாடு இலகு ரக வாகனங்களுக்கு சலுகை
13 சாலைகளில் நேர கட்டுப்பாடு இலகு ரக வாகனங்களுக்கு சலுகை
ADDED : ஏப் 15, 2025 12:30 AM
சென்னை, சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, 13 பிரதான சாலைகளில், கனரக வாகனங்கள் வந்து செல்வதற்கான நேரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை, சென்னை காவல் துறை அறிவித்துள்ளது. இதில், இலகு ரக வாகனங்கள், நண்பகல் 12:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை வந்து செல்லும் வகையில் சலுகை தரப்பட்டுள்ளது.
கனரக வாகனங்கள்
* ஈ.வி.ஆர்., சாலையில் முத்துசாமி பாலம் முதல் கோயம்பேடு மேம்பாலம் வரை; என்.எஸ்.சி., போஸ் சாலை; தம்பு செட்டி தெரு; லிங்கி செட்டி தெரு ஆகியவற்றில், கனரக வாகனங்கள் காலை, 7:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை செல்ல அனுமதி கிடையாது. இரவு 9:00 மணி முதல் மறுநாள் காலை, 7:00 மணி வரை செல்லலாம்
* கோயம்பேடு மேம்பாலம் முதல் மாதவரம் மேம்பாலம் வரை, காலை, 8:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை செல்ல அனுமதி கிடையாது. இரவு 9:00 மணி முதல் காலை 8:00 மணிவரை செல்லலாம்
* கோயம்பேடு மேம்பாலம் முதல் மதுரவாயல் மேம்பாலம் வரையிலான பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காலை, 8:00 மணி முதல் 11:30 மணி வரையும்; மதியம், 3:30 மணி முதல் இரவு, 9:00 மணி வரையிலும் அனுமதி கிடையாது. மற்ற நேரங்களில் செல்லலாம்
இலகு ரக வாகனங்கள்
* முத்துசாமி பாலம் முதல் கோயம்பேடு மேம்பாலம் வரையிலான ஈ.வி.ஆர்.,சாலை; சிந்தாமணி முதல் திருமங்கலம் வரையிலான, 2வது அவென்யூ; செனாய் நகர் - திரு.வி.க.,பூங்கா வரை; கிண்டி கத்திப்பாரா முதல் பாடி மேம்பாலம் வரையிலான, 100 அடி சாலை; என்.எஸ்.சி.,போஸ் சாலை;
ஸ்டான்லி ரவுன்டானா முதல் பிராட்வே ஜங்ஷன் வரையிலான பிரகாசம் சாலை; எஸ்பிளனேடு சாலை ஆகியவற்றில், இலகுரக சரக்கு வாகனங்களுக்கு, காலை, 7:30 மணி முதல் நண்பகல், 12:00 மணி வரையிலும், மதியம் 3:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரையிலும் அனுமதி கிடையாது. நண்பகல், 12:00 மணி முதல் 3:00 மணி வரையிலும், இரவு, 10:00 மணி முதல் மறுநாள் காலை, 7:30 மணி வரையிலும் அனுமதி உண்டு.
இதுகுறித்து, போக்குவரத்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், முதற்கட்டமாக வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட, 13 பிரதான சாலைகளில் கனரக வாகனங்களுக்கான நேர கட்டுப்பாட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வணிகம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, இலகுரக சரக்கு வாகனங்களுக்கு, பகல் நேரத்தில் வந்து செல்லும் வகையில், குறிப்பிட்ட நேரம் ஒதுக்கித் தரப்பட்டுள்ளது' என்றார்.
கனரக வாகனங்கள் நகருக்குள் நுழைய இரவு 10:00 மணி வரை இருந்த தடை, சில சாலைகளில் இரவு 9:00 மணி வரை என மாற்றப்பட்டுள்ளது.
***