/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பத்மாவதி தாயார் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் விமரிசை
/
பத்மாவதி தாயார் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் விமரிசை
பத்மாவதி தாயார் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் விமரிசை
பத்மாவதி தாயார் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் விமரிசை
ADDED : மார் 08, 2024 12:35 PM

சென்னை, தி.நகரில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில், பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோற்சவம், இம்மாதம் 28ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 4ல் கருடசேவை, நேற்று முன்தினம் தேர் திருவிழா விமரிசையாக நடந்தது.
நேற்று காலை, தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு, தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு, கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.
இன்று மாலை 4:00 மணிக்கு, பத்மாவதி தாயாருக்கு மகா புஷ்பயாகம் நடக்கிறது. இதற்கு, பக்தர்கள் மலர் தரலாம்.
தாமரை வகைகள், அல்லி, ஜாதிமுல்லை, சம்பங்கி, கனகாம்பரம், சாமந்தி, தவனம், மருவு, மந்தாரம், லட்சுமிதுளசி, கிருஷ்ணதுளசி, மனோரஞ்சிதம், நந்தியாவட்டை ஆகிய மலர்களை, இன்று மதியம் 12:00 மணிக்குள் கோவிலில் கொடுக்கலாம் என, திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழக, புதுச்சேரி ஆலோசனைக் குழு தலைவர் சேகர் தெரிவித்துள்ளார்.

