/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தன் கைகளை தானே கட்டிக்கொண்டு 'திருமலா பால்' அதிகாரி தற்கொலை போலீஸ் கமிஷனர் அருண் பேட்டி
/
தன் கைகளை தானே கட்டிக்கொண்டு 'திருமலா பால்' அதிகாரி தற்கொலை போலீஸ் கமிஷனர் அருண் பேட்டி
தன் கைகளை தானே கட்டிக்கொண்டு 'திருமலா பால்' அதிகாரி தற்கொலை போலீஸ் கமிஷனர் அருண் பேட்டி
தன் கைகளை தானே கட்டிக்கொண்டு 'திருமலா பால்' அதிகாரி தற்கொலை போலீஸ் கமிஷனர் அருண் பேட்டி
ADDED : ஜூலை 13, 2025 12:13 AM
சென்னை, :“தன் கைகளை தானே பின்னால் கட்டிக்கொண்டு, 'திருமலா பால்' நிறுவன மேலாளர் நவீன் பொலினேனி தற்கொலை செய்துள்ளார்,” என, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்தார்.
திருமலா பால் நிறுவனத்தில் கருவூல மேலாளராக பணிபுரிந்த நவீன் பொலினேனி, 45 கோடி ரூபாய் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணை நடந்து வந்த நிலையில், அவர் மர்மமான முறையில் இறந்தார்.
இது தொடர்பாக, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் கூறியதாவது:
திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் பொலினேனி மரணம், தற்கொலையா, இல்லையா என, சிலர் சந்தேகத்தை கிளப்புகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
அவரது கைகள் கட்டப்பட்ட விதம், அவர் அருகில் இருந்த சிமென்ட் சாக்கு பை ஆகிய ஆதாரங்களை வைத்து பார்க்கும்போது, தன் கைகளை தானே பின்னால் கட்டிக்கொண்டு, அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வருகிறது.
சொத்து, பணம் சம்பந்தப்பட்ட வழக்குகள், என் அனுமதி பெற்றுதான் விசாரிக்க வேண்டும் என, ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளேன்.
பொதுமக்கள் குறைதீர் முகாமின்போது, திருமலா பால் நிறுவன மோசடி தொடர்பாக, கடந்த 25ம் தேதி புகார் வந்தது. நான் அனுமதித்த பிறகே, மத்திய குற்றப்பிரிவு போலீசார், புகார்தாரரிடம் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில், என் அறிவுறுத்தலை மீறி, கொளத்துார் துணை கமிஷனர் பாண்டியராஜன், 45 கோடி ரூபாய் மோசடி புகாரை விசாரித்துள்ளார். அதனாலேயே, அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நவீன் பொலினேனியை, துணை கமிஷனர் பாண்டியராஜன் மிரட்டியதாக எந்த ஆதாரமும் இல்லை. மேலும், இ - மெயிலில் நவீன் அனுப்பிய கடிதத்தில் கூட, காவல் துறை மிரட்டியதாக எதையும் குறிப்பிடவில்லை.
இந்த வழக்கில், அரசியல் பின்புலம் எதுவும் இல்லை. நிதி மோசடி செய்ததாக, இ - மெயிலில் அனுப்பிய கடிதத்திலேயே நவீன் பொலினேனி ஒப்புக்கொண்டுள்ளார்.
கையாடல் செய்த பணத்தில் வாங்கிய நிலத்தை விற்று, பணத்தை திருப்பி தருவதாக நிறுவனத்திடம் கூறியுள்ளார். அதனால் அவருக்கு ஏற்பட்ட அழுத்தத்தால், அவர் வாங்கிய நிலத்திலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.