/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவள்ளூர் 'டி - 20' கிரிக்கெட் ராமச்சந்திரா பல்கலை தகுதி
/
திருவள்ளூர் 'டி - 20' கிரிக்கெட் ராமச்சந்திரா பல்கலை தகுதி
திருவள்ளூர் 'டி - 20' கிரிக்கெட் ராமச்சந்திரா பல்கலை தகுதி
திருவள்ளூர் 'டி - 20' கிரிக்கெட் ராமச்சந்திரா பல்கலை தகுதி
ADDED : பிப் 13, 2025 12:20 AM
சென்னை, திருவள்ளூர் டி - 20 கிரிக்கெட் போட்டியில், அரையிறுதியில் ராமச்சந்திரா பல்கலை, ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில், இந்து கல்லுாரியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமி இணைந்து, கல்லுாரிகளுக்கு இடையிலான, 'டி - 20' கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன. செங்குன்றம் - திருவள்ளூர் சாலையில் உள்ள மேக்னா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் போட்டிகள் நடக்கின்றன.
நேற்று காலை நடந்த முதல் அரையிறுதியில், இந்து கல்லுாரி மற்றும் ராமச்சந்திரா பல்கலை அணிகள் எதிர்கொண்டன. முதலில் பேட்டிங் செய்த, இந்து கல்லுாரி அணி, 19.2 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 125 ரன்களை அடித்தது.
அடுத்து பேட்டிங் செய்த, ராமச்சந்திரா பல்கலை அணி, 16 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து, 126 ரன்களை அடித்து, ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அணியின் வீரர்கள் பிரணாவ், 27 பந்துகளில் தலா நான்கு சிக்சர் மற்றும் பவுண்டரியுடன், 52 ரன்களும், தியோதாத்தா ராஜ்வாடே, 48 பந்துகளில் ஐந்து பவுண்டரியுடன், 45 ரன்களை எடுத்து, வெற்றிக்கு கை கொடுத்தனர்.