/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரவுடியை வெட்டி கொல்ல முயன்ற திருவொற்றியூர் வாலிபர்கள் கைது
/
ரவுடியை வெட்டி கொல்ல முயன்ற திருவொற்றியூர் வாலிபர்கள் கைது
ரவுடியை வெட்டி கொல்ல முயன்ற திருவொற்றியூர் வாலிபர்கள் கைது
ரவுடியை வெட்டி கொல்ல முயன்ற திருவொற்றியூர் வாலிபர்கள் கைது
ADDED : பிப் 18, 2024 12:04 AM
புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், எஸ்.பி.கோவில் தெருவைச் சேர்ந்தவர் யோகேஷ், 24; சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர், புதுவண்ணாரப்பேட்டை, எம்.பி.டி., குடியிருப்பு மைதானத்தில் நின்றபோது, அங்கு வந்த நான்கு பேர் கும்பல், அவரை கத்தியால் வெட்டி தப்பினர்.
படுகாயமடைந்த யோகேஷ், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புதுவண்ணாரப்பேட்டை போலீசாரின் விசாரணையில், திருவொற்றியூர், காலடிப்பேட்டையைச் சேர்ந்த ராஜேஷ், 35, ராஜேஸ்வரி நகரைச் சேர்ந்த தினேஷ், 21, டி.எஸ்.ஆர்., நகரைச் சேர்ந்த ராமு, 22, ராயப்பேட்டையைச் சேர்ந்த ரகுபதி, 28, ஆகியோர், முன்விரோதம் காரணமாக சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
கடந்த 2023ல், யோகேஷ் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து ராஜேஷின் நண்பர் சசிதரனை கத்தியால் வெட்டினார். இதன் முன்விரோதம் காரணமாக, ராஜேஷ் தன் நண்பர்களுடன் சேர்ந்து யோகேஷை தீர்த்துக்கட்ட முயன்றது தெரியவந்தது.
இதில், ராஜேஷ் திருவொற்றியூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தினேஷ் மீது, ஒரு கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. போலீசார் நால்வரையும் நேற்று கைது செய்து, மூன்று கத்திகளை பறிமுதல் செய்தனர்.