தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கன்டெய்னரில் தீக்கிரையான 'டிஷ்யூ பேப்பர்'

கன்டெய்னரில் தீக்கிரையான 'டிஷ்யூ பேப்பர்'

கன்டெய்னரில் தீக்கிரையான 'டிஷ்யூ பேப்பர்'


ADDED : டிச 20, 2024 12:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 20, 2024 12:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்றத்துார்: ஹரியானா மாநிலத்தில் இருந்து, சென்னை முகலிவாக்கம் பகுதியில் உள்ள கிடங்கிற்கு, 'டிஷ்யூ பேப்பர்' பண்டல்களை ஏற்றி,

நேற்று முன்தினம் இரவு கன்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது. லாரியை கண்ணையா, 30, என்பவர் ஓட்டி வந்தார்.

மதனந்தபுரம் - -முகலிவாக்கம் சாலையில், முகலிவாக்கத்தை கடந்தபோது மின் கம்பி உரசி, கன்டெய்னர் லாரியில் தீப்பொறி ஏற்பட்டது. இதில், உள்ளே இருந்த டிஷ்யூ பேப்பர்கள் எரிய துவங்கின.

விருகம்பாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர். இந்த விபத்தில், லாரியில் இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான டிஷ்யூ பேப்பர்கள் நாசமாயின. மாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us