/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.101 கோடியில் அமைகிறது டி.எம்.எஸ்., ஆபீஸ் கட்டடம்
/
ரூ.101 கோடியில் அமைகிறது டி.எம்.எஸ்., ஆபீஸ் கட்டடம்
ரூ.101 கோடியில் அமைகிறது டி.எம்.எஸ்., ஆபீஸ் கட்டடம்
ரூ.101 கோடியில் அமைகிறது டி.எம்.எஸ்., ஆபீஸ் கட்டடம்
ADDED : ஆக 31, 2025 02:14 AM
சென்னை:தமிழக மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகமான டி.எம்.எஸ்., அலுவலகத்திற்கு, 101.90 கோடி ரூபாயில், புதிய கட்டடம் கட்ட, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழக மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் இயங்கும் மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகம், சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில், பழைய கட்டடத்தில் இயங்கி வந்தது.
அந்த கட்டடம் பயன்படுத்த முடியாத நிலையில், டி.எம்.எஸ்., அலுவலகம், 108 ஆம்புலன்ஸ் அலுவலக கட்டடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அத்துடன், மருத்துவ ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் இ.எஸ்.ஐ., பிரிவு, அயனாவரம் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு இயங்கி வருகிறது.
இந்நிலையில், மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் டி.எம்.எஸ்., அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட, 103.40 கோடி ரூபாய் கோரப்பட்டது. ஆனால், தமிழக அரசு, 101.90 கோடி ரூபாய்க்கு அனுமதி அளித்து, அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., வளாகத்தில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரக கட்டடம், தரைத்தளம் மற்றும் எட்டு தளங்களுடன் அமைக்கப்பட உள்ளது. இந்த கட்டடம் கட்டப்பட்டபின், ஒருங்கிணைந்த மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.