/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டி.என்.சி.ஏ., லீக் கிரிக்கெட்: தெற்கு ரயில்வே வெற்றி
/
டி.என்.சி.ஏ., லீக் கிரிக்கெட்: தெற்கு ரயில்வே வெற்றி
டி.என்.சி.ஏ., லீக் கிரிக்கெட்: தெற்கு ரயில்வே வெற்றி
டி.என்.சி.ஏ., லீக் கிரிக்கெட்: தெற்கு ரயில்வே வெற்றி
ADDED : அக் 05, 2024 12:19 AM
சென்னை, டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில், மாநில அளவிலான 'லீக் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்' போட்டி நடத்தப்படுகிறது.
இதில் கல்லுாரி, நிறுவனம், அமைப்புகள், குழுக்களைச் சேர்ந்த அணிகள், பகுதி மற்றும் மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டுள்ளன. போட்டிகள் 50 ஓவர் அடிப்படையில் நடக்கின்றன.
இதில், தெற்கு ரயில்வே மற்றும் ஸ்வராஜ் நிறுவன அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், தெற்கு ரயில்வே அணி 49.3 ஓவர்களில் 249 ரன்கள் எடுத்தது. ஜாபர் ஜமால் 91 ரன்கள் குவித்தார்.
பின்னர் ஆடிய ஸ்வராஜ் அணிக்கு நடராஜன், நிலேஷ் பலமான அடித்தளம் அமைத்தும், மற்றவர்கள் சோபிக்கத் தவறினர். இதனால் அந்த அணியினர் 44.5 ஓவரில் 194 ரன்களில் ஆட்டமிழக்க, தெற்கு ரயில்வே அணியினர் 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
தெற்கு ரயில்வே அணியின் பாஸ்கர் 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். ஸ்வராஜ் அணியின் நடராஜன், நிலேஷ் முறையே 66 மற்றும் 62 ரன்கள் எடுத்தனர். போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.