/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டி.என்.சி.ஏ., யு- 25 கிரிக்கெட் செங்கை மாவட்டம் வெற்றி
/
டி.என்.சி.ஏ., யு- 25 கிரிக்கெட் செங்கை மாவட்டம் வெற்றி
டி.என்.சி.ஏ., யு- 25 கிரிக்கெட் செங்கை மாவட்டம் வெற்றி
டி.என்.சி.ஏ., யு- 25 கிரிக்கெட் செங்கை மாவட்டம் வெற்றி
ADDED : ஆக 29, 2025 10:24 PM

சென்னை, மாவட்டங்களுக்கு இடையிலான யு - 25 கிரிக்கெட் போட்டியின் காலிறுதியில், செங்கல்பட்டு மாவட்டம், 67 ரன்கள் வித்தியாசத்தில் காஞ்சிபுரம் அணியை தோற்கடித்தது.
டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்டங்களுக்கு இடையிலான யு - 25 கிரிக்கெட் நடந்து வருகிறது. நேற்று நெல்லையில் நடந்த காலிறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த, செங்கல்பட்டு அணி, 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு, 257 ரன்களை அடித்தது.
அடுத்து பேட்டிங் செய்த, காஞ்சிபுரம் அணி, 41.1 ஓவர்களில் 'ஆல் அவுட்' ஆகி, 190 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால்,செங்கல்பட்டு அணி, 67 ரன்கள் வித்தியாசத்தில், வெற்றி பெற்றது.
அதேபோல், திண்டுக்கலில் நடந்த காலிறுதியில், நாமக்கல் அணி, 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழந்து, 206 ரன்களை அடித்தது. அணியின் வீரர் கவீஷ், 148 பந்துகளில் 14 பவுண்டரியுடன் 113 ரன்களை அடித்தது. அடுத்த பேட்டிங் செய்த, திருவண்ணாமலை அணி, 39.2 ஓவர்களில், ஆல் அவுட் ஆகி, 97 ரன்களில் ஆட்டமிழந்து தோல்வியடைந்தது.