/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ. 2 லட்சம் கையாடல் தனியார் ஊழியர் கைது
/
ரூ. 2 லட்சம் கையாடல் தனியார் ஊழியர் கைது
ADDED : பிப் 15, 2025 09:36 PM
திரு.வி.க.நகர்:வியாசர்பாடியைச் சேர்ந்தவர் காளிதாஸ், 29. இவர், ஜெ.டி., என்டர்பிரைஸ் என்ற பைனான்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார்.
நிறுவனத்தில், அலுவலக ஊழியராக, கொடுங்கையூரைச் சேர்ந்த ஜஸ்டின், 50, என்பவர் பணிபுரிந்தார். நேற்று காலை 10:00 மணியளவில், அலுவலகத்தில் இருந்த 2 லட்சம் ரூபாய் மாயமானது. அதிர்ச்சி அடைந்த காளிதாஸ், ஜஸ்டினுக்கு போன் செய்துள்ளார்.
மொபைல்போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த காளிதாஸ், திரு.வி.க., நகர் போலீசில், மதியம் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில் ஜஸ்டின் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, 1.95 லட்சம் ரூபாயை மீட்டனர். பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று இரவு சிறையில் அடைத்தனர்.