/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சேதமடைந்த சாலை சீரமைக்க இடையூறு அதிகாரிகள் நடவடிக்கையால் விமோசனம்
/
சேதமடைந்த சாலை சீரமைக்க இடையூறு அதிகாரிகள் நடவடிக்கையால் விமோசனம்
சேதமடைந்த சாலை சீரமைக்க இடையூறு அதிகாரிகள் நடவடிக்கையால் விமோசனம்
சேதமடைந்த சாலை சீரமைக்க இடையூறு அதிகாரிகள் நடவடிக்கையால் விமோசனம்
ADDED : அக் 21, 2024 03:15 AM

சோழிங்கநல்லுார்:சோழிங்கநல்லுார் மண்டலம், 199வது வார்டு, மாடர்ன்பள்ளி சாலை 2 கி.மீ., நீளம், 40 அடி அகலம் கொண்டது. இந்த சாலையில், பல்வேறு நிறுவனங்களின் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ளன. அங்கு 3,500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த சாலையில், 1.4 கி.மீ., துாரம் வரை பிரச்னை இல்லை. இடையில், 600 மீட்டர் துாரம் சாலையை சிலர் உரிமை கொண்டாடி, வளர்ச்சி பணிகளுக்கு இடையூறு செய்து வந்தனர்.
இதனால், சாலை, வடிகால், குடிநீர், கழிவுநீர் குழாய் பதிக்க முடியாமல், அதிகாரிகள் திணறினர். கடந்த 15ம் தேதி பெய்த மழையில், சாலையில் வெள்ளம் தேங்கியது.
அதை, அருகில் உள்ள ரெட்டைக்கேணி ஏரியில் வடிய செய்ய, மாநகராட்சி பணியாளர்களும், பகுதிவாசிகளும் இணைந்து சாலை ஓரம் தற்காலிக மண் கால்வாய் அமைக்க முயன்றனர். அப்போது, சிலர் காரை குறுக்கே நிறுத்தி இடையூறு செய்தனர். இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் மேற்பார்வையில், சாலையில் தேங்கிய மழைநீரை வடிய செய்து, சேதமடைந்த சாலை சீரமைக்கப்பட்டது. 'இனிமேல் யாராவது இடையூறு செய்தால், போலீசில் புகார் அளித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.