/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக பகுதிக்கு (01/03/24)
/
இன்று இனிதாக பகுதிக்கு (01/03/24)
ADDED : மார் 01, 2024 12:15 AM
ஆன்மிகம்
நம்மாழ்வார் திருநட்சத்திர விழா
பார்த்தசாரதி பெருமாள் கோவில், -இரவு 7:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
சிங்காரவேலர் அபிஷேகம்
சஷ்டி, விசாகம் முன்னிட்டு, கபாலீஸ்வரர் கோவிலில் சிங்காரவேலர் அபிஷேகம்-, மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
சிம்ம வாகன புறப்பாடு
திருமலை திருப்பதி தேவஸ்தான பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு முத்துப்பந்தல், -காலை 9:00 மணி. சிம்ம வாகன புறப்பாடு, -இரவு 7:00 மணி. இடம்: தி.நகர்.
தியாகராஜர் அராதனை விழா
தியாகராஜர் ஆராதனா சபா சார்பில், தியாகராஜர் 117வது ஆராதனை துவக்க விழா. இடம்: நங்கநல்லுார்.
மாசி மாதம் பிரம்மோற்சவம், காலை - ஹம்ஸ வாகனம், மாலை - சூர்ய பிரபை. காலை - மாலை. இடம்: பாஷ்யகார ஸ்ரீ செங்கமலவல்லி நாயிகா சமேத சென்ன ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில், கோவிந்தன் சாலை, மேற்கு மாம்பலம்.
பகவான் யோகி ராம்சுரத்குமார் 23வது ஆராதனை விழா. காலை: 8:00 - 10:00 மணி வரை. இடம்: ஸ்ரீஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி மண்டபம், கபாலி நகர், கூடுவாஞ்சேரி.
சுக்ரவார வழிபாடு
சிறப்பு அபிஷேகம், மாலை 6:00 மணி. இடம்: வீராத்தம்மன் கோவில், பள்ளிக்கரணை.
சஷ்டி வழிபாடு
சுவாமிநாத சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, காலை 10:00 மணி. இடம்: ஓம் கந்தாஸ்ரமம், எண்: 1, கம்பர் தெரு, மஹாலட்சுமி நகர், சேலையூர்.
சஷ்டி பூஜை
சிறப்பு அபிஷேகம், காலை 6.00 மணி, சிறப்பு அலங்காரம், மாலை 6.00 மணி. இடம்: சிவசுப்ரமணிய சுவாமி சன்னிதி, கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை.
பொது
கண்காட்சி
கலாகிருதி கைவினைப் பொருட்கள் கண்காட்சி, விற்பனை. காலை 10:30 மணி. இடம்: கத்திப்பாரா அர்பன் ஸ்கொயர், கிண்டி.

