ADDED : பிப் 07, 2024 12:25 AM
அ நிறம் | அளவு
சென்னை, :தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தின் மண்டல அலுவலகத்தில் இன்று வாடிக்கையாளர் குறைதீர்ப்பு முகாம் நடக்கிறது.
'சென்னை, நுங்கம்பாக்கம், 143, ஸ்டெர்லிங் ரோடு' என்ற முகவரியில் உள்ள தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில், தொழில்முனைவோர், காப்பீட்டாளர், தொழிலாளிகள் உள்ளிட்டோர் தங்களின் இ.எஸ்.ஐ., தொடர்பான புகார்களை, இன்று மதியம் 2:30 மணிக்கு தெரிவிக்கலாம். இன்று பங்கேற்க இயலாதோர் வரும் 16ம் தேதி, இதே நேரத்தில் பங்கேற்கலாம்.
