/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடிவுடையம்மன் கோவிலில் இன்று நவராத்திரி விழா
/
வடிவுடையம்மன் கோவிலில் இன்று நவராத்திரி விழா
ADDED : அக் 03, 2024 12:53 AM
திருவொற்றியூர், திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், புரட்டாசி மாதம், வடிவுடையம்மன் நவராத்திரி திருவிழா இன்றிரவு 7:00 - 8:30 மணிக்குள், கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
அதைத் தொடர்ந்து, வடிவுடையம்மன் உற்சவ தாயார் தபசு அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதி உலா வருவார்.
விழா நாட்களில், இரவு 7:00 மணிக்கு மேல், உற்சவ தாயார், பராசக்தி, நந்தினி, கவுரி, பத்மாவதி, உமா மகேஸ்வரி, ராஜ ராஜேஸ்வரி, மகிஷாசூரமர்த்தினி, சரஸ்வதி உள்ளிட்ட அலங்காரங்களில் எழுந்தருளி மாடவீதி உலா வருவார்.
நிறைவு நாளான, 12 ம் தேதி, உற்சவ அம்மன், மீனாட்சி அலங்காரத்தில் எழுந்தருளி, மாடவீதி உலா வருவார். பின், தியாகராஜர் மாடவீதி உற்சவத்துடன் விழா நிறைவுறும்.
மணலி புதுநகர்
மணலிபுதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில், புரட்டாசி மாதம் திருவிழா நாளை காலை 6:30 மணிக்கு, அய்யா திருநாமக்கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்றைய தினம் இரவு அய்யா காளை வாகனத்தில் எழுந்தருளி பதிவலம் வருவார்.
முக்கிய நிகழ்வான, அய்யா சரவிளக்கு மற்றும் திருவிளக்கு பணிவிடை, எட்டாம் நாளான, 11 ம் தேதி இரவும், திருத்தேர் உற்சவம், பத்தாம் நாளான, 13 ம் தேதி காலை, 11:30 மணிக்கும் நடக்கும்.
நிறைவு நாளில், அய்யா இந்திர விமானத்தில் பதிவலம் வருதல், பின் இரவில், அய்யா பூபல்லக்கில் பதிவலம் வருதல் மற்றும் திருநாமக்கொடி அமர்த்துதல் நிகழ்வுகளுடன், திருவிழா நிறைவு பெறுகிறது.