ADDED : ஏப் 05, 2025 12:12 AM
- ஆன்மிகம் -
* பார்த்தசாரதி கோவில்
ராமர் மண்டப திருமஞ்சனம் - -காலை 9:00 மணி. ராமர் சிறிய தேர் பெரிய வீதி புறப்பாடு- - மாலை 5:00 மணி. முதலியாண்டான், குலசேகரன், எம்பார் ஆஸ்தானம் - -மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
* கபாலீஸ்வரர் கோவில்
பங்குனி பெருவிழாவில் அதிகார நந்தி காட்சி- - காலை 6:00 மணி. வெள்ளி பூத, பூதகி வாகனம், தாரகாசுர வாகனம் புறப்பாடு- - இரவு 9:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
* மருந்தீஸ்வரர் கோவில்
பங்குனி பெருவிழாவில் அதிகார நந்தி சேவை- - காலை 6:00 மணி. சந்திரசேகரர் பூத வாகனத்தில் சந்திரனுக்கு காட்சியருளுதல் - -இரவு 8:30 மணி. இடம்: திருவான்மியூர்.
* சுந்தரராஜ பெருமாள் கோவில்
ராம நவமியை முன்னிட்டு, மூலவர் மற்றும் உற்சவர் திருமஞ்சனம்- - மாலை 4:00 மணி. இடம்: சோமங்கலம்.
* சாரதாம்பாள் கோவில்
ராமநவமி உபன்யாசம் - நிகழ்த்துபவர்: உ.வே. அக்காரக்கனி ஸ்ரீநிதி சுவாமிகள் - மாலை 6:30 மணி முதல். இடம்: சாந்தி நகர், ஆதம்பாக்கம்.
* மல்லிகேஸ்வரர் கோவில்
பங்குனி பெருவிழா அதிகார நந்தி சேவை - காலை 7:30 மணி, பூத வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் - இரவு 7:00 மணி.
இடம்: லிங்கி செட்டி தெரு, மண்ணடி.
* கல்யாண வரதராஜர் கோவில்
கோதண்டராமர் கர்ப்ப உத்சவத்தின் எட்டாம் நாள், ராம பிரான், குதிரை வாகனத்தில் எழுந்தருளி மாடவீதி உலா - மாலை 7:00 மணி. இடம்: காலடிப்பேட்டை, திருவொற்றியூர்.
*ஆதிபுரீஸ்வரர் கோவில்
நந்தி கல்யாணம் -- மாலை 5:00 மணி முதல். சுவாமி வீதியுலா -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
* ஆஞ்சநேயர் கோவில்
ஸ்ரீராமா அசோசியேஷன் சார்பில், ஸ்ரீராம நவமியின் ஸ்ரீ கனக தசரா பஜனை மண்டலியின் இன்னிசை விழா - மாலை 5:00 மணி. இடம்: ஹனுமந்தராயன் கோவில் தெரு, திருவல்லிக்கேணி.
* சுந்தர விநாயகர் ஆலயம்
ஸ்ரீ ராம நவமி மகோத்சவத்தில் உபன்யாசம்: கம்பராமாயணம் - ஸ்ரீ ராம அவதாரம், நிகழ்த்துபவர்: டாக்டர் கலியன் சம்பத் - மாலை 6:30 மணி, இடம்: தண்டீஸ்வரர் நகர், வேளச்சேரி.
* பாலசுப்ரமணிய சுவாமி கோவில்
சுவாமி படிச்சட்டத்தில் திருவீதி உலா - காலை 9:00 மணி, யானை வாகனத்தில் திருவீதி உலா - இரவு 8:30 மணி. இடம்: குமரன் குன்றம் மலைக்கோவில், குரோம்பேட்டை.
* பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்
அபிஷேக அலங்கார ஆராதனை -- காலை 9:00 மணி. இடம்: கவுரிவாக்கம்.
* நாமசங்கீர்த்தனம்
ராஜராஜேஸ்வரி கல்சுரல் அகாடமி சார்பில், ராமநவமி 43வது ஆண்டு விழாவில் முரளி பாகவதர் மற்றும் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் - மாலை 6:30 மணி. இடம்: அகாடமி வளாகம், 17வது தெரு, தில்லைகங்கா நகர், நங்கநல்லுார்.
- பொது -
* மாநில கல்லுாரி விழா
கல்லுாரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா - காலை 9:30 மணி. இடம்: திருவள்ளுவர் அரங்கம், மாநிலக் கல்லுாரி, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி.
* பெலா பெஸ்ட்
பொழுதுபோக்கு, ஷாப்பிங், விதவிதமான உணவுகளை சுவைக்க, ஒரு மாத பெலா பெஸ்ட் - -மாலை 4:00 மணி. இடம்: கத்திப்பாரா, கிண்டி.