ADDED : ஆக 07, 2025 12:27 AM
ஆன்மிகம்
பார்த்தசாரதி கோவில்
ஆளவந்தார் ஆஸ்தானம், காலை 8:30 மணி, சேனை முதன்மையார் திருநட்சத்திர விழா, மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர்
பன்னிரு திருமுறை மூன்றாம் நாள் விழாவில் சண்முக சுந்தர தேசிகர், சிவராஜபதி ஓதுவார் திருமுறை இன்னிசை, மாலை 6:00 மணி, பேராசிரியர் அரங்க.ராமலிங்கத்தின் சொற்பொழிவு, இரவு 7:00 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில்.
முத்துமாரியம்மன் கோவில்
ஆடி திருவிழா 3ம் ஆண்டு பிரம்மோத்சவ விழாவை ஒட்டி, காமதேனு வாகனத்தில் அம்மன் உலா - மாலை 6:30 மணி. இடம்: தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வேளச்சேரி.
துர்க்கை அம்மன் கோவில்
அம்மனுக்கு விளக்கு வைத்து வர்ணித்து கேட்கும் விழா, இரவு 8:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை.
பட்டினத்தார் கோவில்
பக்தி சொற்பொழிவு, முனைவர் மா.கி.ரமணன், மாலை 5:00 மணி, சூப்பர் சுப்புராயன், மாலை 6:00 மணி, பரதநாட்டியம், இரவு 7:00 மணி. இடம்: திருவொற்றியூர்.
ஆதிகேசவப் பெருமாள் கோவில்
குளம் துாய்மைபடுத்தும் உழவாரப்பணி, காலை 9:00 மணி முதல். இடம்: மயிலாப்பூர்.
வாராகி அறச்சபை
வாராகி நவராத்திரி, இளநீர் அபிஷேகம், காலை 7:00 மணி, ஹோமம், மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்., மகால், பள்ளிக்கரணை.
சீரடி ஆத்ம சாய்பாபா கோவில்
பாலாபிஷேகம், காலை 8.00 மணி, சாவடி ஊர்வலம், மாலை 6.30 மணி. இடம்: மீனாட்சி நகர், மதர் ஸ்கூல் அருகில், பள்ளிக்கரணை.
சத்ய ஞான தீப நித்ய தரும சாலை
வள்ளலார் வழிபாடு, திருவருட்பா அகவல் முற்றோதல், திரை நீக்கி ஜோதி வழிபாடு, அன்னதானம், மாலை 6:00 மணி முதல். இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிகரை தெரு, வேளச்சேரி.
பொது
ஹஸ்தகலா கண்காட்சி
கைவினை, ஆடைகள், ஆபரணக் கண்காட்சி, காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணிவரை. இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை.
பெண் நலன் குறித்த பயிலரங்கம்
எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் சார்பில் தாய்பால் கொடுப்பதன் அவசியம் குறித்த இலவச சிறப்பு பயிலரங்கம், மாலை 3:00 மணி. இடம்: எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மலர் மருத்துவமனை, அடையாறு.
செட்டிநாடு மருத்துவமனை
இலவச பவுத்திரம், மூலம் பரிசோதனை முகாம், காலை 9:00 காலை மணி. இடம்: 117, எல்காட், ஓ.எம்.ஆர்., காரப்பாக்கம்.
டிவைன் மதர் பிரானிக் ஹீலிங் சென்டர்
தினசரி இலவச உடற்பயிற்சி மற்றும் தியான வகுப்பு, காலை 10:30 மணி முதல். இடம்: ஜோதி நகர் பேருந்து நிறுத்தம் அருகில், மாடம்பாக்கம்.