ADDED : நவ 07, 2025 12:11 AM
ஆன்மிகம் கபாலீஸ்வரர் கோவில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, கற்பகாம்பாள் ஆலய பிரஹார விழா- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
பார்த்தசாரதி பெருமாள் கோவில் பார்த்தசாரதி பெருமாள் சின்ன மாடவீதி புறப்பாடு - -மாலை 5:15 மணி. பெருமாள், திருப்பாணாழ்வார் ஆஸ்தானம்- - மாலை 6:15 மணி.
சுதர்ஷன நரசிம்ம இஷ்டி யாகம் திரிதண்டி சின்ன ஸ்ரீமன்நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகள் முன்னிலையில், உலக நன்மைக்காக ஸமதா இஷ்டி யாகத்தில், ஸ்ரீசுதர்ஷன நரசிம்ம இஷ்டி- - காலை 9:30 மணி. இடம்: எஸ்.பி.ஆர்., சிட்டி, பெரம்பூர்.
சிவசுப்ரமணிய சுவாமி கோவில் சுக்கிர வார கிருத்திகை அபிஷேகம் - காலை 6:00 மணி. ராகவன்ஜியின் 1,008 போற்றி - மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.
ஓம் கந்தாஸ்ரமம் மாதா புவனேஸ்வரிக்கு அபிஷேகம் - காலை 10:00 மணி. சிறப்பு அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
அஷ்டலட்சுமி கோவில் மண்டல பூஜை - காலை 7:00 மணி. இடம்: பெசன்ட் நகர்.
தேவி கருமாரி அம்மன் கோவில் ராகு கால பூஜை - காலை 10:30 மணி. இடம்: புது நகர் 3வது தெரு, ஜல்லடியன்பேட்டை.
துர்க்கையம்மன் கோவில் ராகு கால அபிஷேக, அலங்கார, ஆராதனை - காலை 10:30 மணி. இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.
ஆதிபுரீஸ்வரர் கோவில் மகா அபிஷேகம் - காலை 6:00 மணி. பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
பொது இசை நிகழ்ச்சி மதுரத்வனி சார்பில் இசை நிகழ்ச்சி. மாலை 6:15 மணி. இடம்: ஆர்.கே., கன்வென்ஷன் சென்டர், மயிலாப்பூர்.

