ADDED : மே 16, 2025 01:10 AM
ஆன்மிகம்
மகா சங்கடஹர சதுர்த்தி
'சிவனும் சித்ரகுப்தனும்' தலைப்பில் சொற்பொழிவு, நிகழ்த்துபவர், புருஷோத்தமன், மாலை 6:30 மணி. இடம்: கணபதி கோவில், வி.ஜி.பி., சாந்தி நகர் விரிவு, பள்ளிக்கரணை.
சிறப்பு அபிஷேகம், மாலை 6:45 மணி. இடம்: சுந்தர் விநாயகர் கோவில், பள்ளிக்கரணை
துர்க்கையம்மன் கோவில்
ராகு கால பூஜை, காலை 10:30 மணி. இடம்: வொய்ட்ஸ் சாலை, ராயப்பேட்டை.
ஆதிபுரீஸ்வரர் கோவில்
ராகு கால அபிஷேகம், காலை 10:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
நாகாத்தம்மன் கோவில்
விநாயகருக்கு அபிஷேகம், சுவாமி உள்புறப்பாடு, மாலை 6:30 மணி முதல். இடம்: அய்யன் குளக்கரை, நாராயணபுரம்.
சிவசுப்ரமணிய சுவாமி கோவில்
சுக்ரவார அபிஷேகம், காலை 6:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம், மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.
பிரம்மோத்சவ விழா
இரவு, சண்டேஸ்வர் உத்சவம். இடம்: திரிபுரசுந்தரி சமேத ஆதிபுரீஸ்வரர் கோவில், சிந்தாதிரிபேட்டை.
பார்த்தசாரதி பெருமாள் கோவில்
வரதர் திருமஞ்சனம், காலை 9:00 மணி, யானை வாகன புறப்பாடு, மாலை 5:00 மணி, மணவாளமாமுனிகள் ஆஸ்தானம், மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில்
சிங்காரவேலர் வசந்த விழா, நான்காம் நாளை முன்னிட்டு அபிஷேகம், காலை 11:00 மணி. சதுர்த்தி முன்னிட்டு நர்த்தன விநாயகர் அபிஷேகம், மாலை 4:30 மணி, சுவாமி புறப்பாடு, இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
பொது
கைவினை கண்காட்சி
கைவினைப் பொருட்கள், ஆடைகள், புராதன பொருட்கள் குறித்த கோடை கால சிறப்பு கண்காட்சி, காலை 10:00 மணி. இடம்: நெக்சஸ் விஜயா மால், வடபழனி.
உடல்நல பரிசோதனை
பக்கவாதம் தொடர்பான இலவச பரிசோதனைகள், ஆலோசனைகள் பெறலாம், மாலை 4:00 மணி. இடம்: எம்.ஜி.எஸ்., ஹெல்த்கேர் மலர், அடையாறு.