ADDED : ஆக 16, 2025 12:27 AM
ஆன்மிகம் அனந்த பத்மநாப சுவாமி கோவில் மாவுலி ஞானேஷ்வர் மகாராஜாவின் 750வது ஜெயந்தி விழா, பங்கேற்பு: கவர்னர் ரவி, காலை 7:00 மணி முதல். இடம்: அடையாறு.
பார்த்தசாரதி கோவில் திருமங்கையாழ்வார் திருநட்சத்திர விழா, மாலை 6:00 மணி, திருவாராதனம் இரவு 8:00 மணி, திருநடைக்காப்பு, இரவு 9:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில் பன்னிரு திருமுறை விழாவில் ஞானசம்பந்தன், விக்னேஷ் ஆறுமுகம் ஓதுவாரின் திருமுறை இன்னிசை, மாலை 5:00 மணி, மூர்த்தியின் சொற்பொழிவு, இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
அய்யப்பன் கோவில் பாகவத சப்தாக மகா யக்ஞத்தை முன்னிட்டு, வாமனன் நம்பூதரி தலைமையில் பாராயணம், காலை 6:30 மணி முதல். ரங்கசுவாமி தீட்சிதர் உபன்யாசம், மாலை 6:15 மணி. இடம்: மடிப்பாக்கம்.
சிவசுப்ரமணிய சுவாமி கோவில் ஆடி கிருத்திகை சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை, காலை 6:00 மணி, ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம், மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.
சீனிவாச பெருமாள் கோவில் கம்ப ராமாயண சொற்பொழிவு, தேரழுந்துார் புலவர் அரங்கராசன், மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி. இடம்: காலேஜ் சாலை, பழனியப்பா நகர், கவுரிவாக்கம்.
நாகாத்தம்மன் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு பால் குடம் ஊர்வலம், மதியம் 12:00 மணி, பரதநாட்டியம், இரவு 7:00 மணி. இடம்: அய்யன் குளக்கரை, நாராயணபுரம், பள்ளிக்கரணை.
பாரதிய வித்யா பவன் நாம சாகர், விட்டல் மகராஜ், மாலை 6:30 மணி. இடம்: கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர்.
பொது சுதந்திர தின வாரம் இலவச நீரிழிவு நோய் பரிசோதனை முகாம், காலை 8:00 மணி முதல். இடம்: தீபம் மெட் பர்ஸ்ட் மருத்துவமனை, வேளச்சேரி பிரதான சாலை, பள்ளிக்கரணை.
கிருஷ்ண தர்ஷன் கண்காட்சி பூம்புகார் நிறுவனம் சார்பில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, கிருஷ்ண தர்ஷன் கண்காட்சி, காலை 10:00 மணி, இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணா சாலை.
காந்தி சில்ப் பஜார் கைவினை பொருட்கள் மற்றும் கைத்தறி துணிகள் கண்காட்சி, காலை 10:00 மணி. இடம்: அன்னை தெரசா மகளிர் வளாகம், வள்ளுவர்கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம்.
பாரத சந்தை கண்காட்சி கைவினைப் பொருட்கள், கைத்தறி ஆடைகள், அணிகலன்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி, காலை 11:00 மணி. இடம்: ஐஸ்வர்யா மகால், அன்னை சரஸ்வதி நகர், வடபழனி.
புத்தகம் வாசிப்பு நிகழ்வு அமைதியான சூழலில், 'டவர் ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு, காலை 6:30 மணி முதல். இடம்: டவர் பூங்கா, அண்ணா நகர்.
இயற்கை சூழலில், ஏரி அழகை ரசித்தபடி, 'லேக் ரீட்ஸ்'எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு, காலை 6:00 மணி. இடம்: ஆம்பி தியேட்டர், சிட்லப்பாக்கம்.
கிருஷ்ண ஜெயந்தி இசை விழா ஜே.பி., கல்சுரல் அகாடமியின் இசை நிகழ்ச்சி, துவக்கி வைத்து விருது வழங்குபவர், உயர்நீதிமன்ற நீதிபதி பி.பி.பாலாஜி, மாலை 6:00 மணி. இடம்: ஜி.என்.சாலை, வாணி மஹால், தி.நகர்.
மகரிஷி வித்யா மந்திர் ஆழ்நிலை தியான பயிற்சி வகுப்புகள் துவக்கம், மாலை 6:00 மணி. இடம்: மகரிஷி வேத வித்யா பவன், 28, டாக்டர் குருசாமி சாலை, சேத்துப்பட்டு.