ADDED : ஜூன் 17, 2025 11:59 PM
ஆன்மிகம்
பார்த்தசாரதி கோவில்
வேதவல்லி தாயார், ரங்கநாதர் திருமஞ்சனம்- - காலை 9:30 மணி. தாயார், ரங்கநாதர் உள் புறப்பாடு- - மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில்
அஷ்டமியை முன்னிட்டு, கபாலீஸ்வரர் சுவாமிக்கு அபிஷேகம் - -காலை 8:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
முருக பெருமான் கோவில்
வைகாசி விசாக பிரம்மோத்சவ விடையாற்றி கலை நிகழ்ச்சியில், நடராஜர் நாட்டியப்பள்ளி மாணவியர் நாட்டிய நிகழ்ச்சி - -மாலை 6:00 மணி. மகன்யஸ்ரீ குழுவினரின் தமிழ் பக்திப் பாடல்கள் - -இரவு 7:00 மணி. இடம்: வடபழனி.
ஜெய் பிரத்யங்கிரா பீடம்
அஷ்டமி நடுநிசி நிகும்பலா ஹோமம் - இரவு 9:00 மணி முதல் அதிகாலை வரை. இடம்: வெண்பாக்கம் மலையடிவாரம், சிங்கபெருமாள் கோவில் வழி, வெங்கடாபுரம்.
வாராகி அறச்சபை
அஷ்டமி ஹோமம் - மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்., மஹால் வளாகம், பள்ளிக்கரணை.
பொது
கம்ப ராமாயண வகுப்பு
கம்பன் கழகத்தின் கம்ப ராமாயண வகுப்பு, வினாடி - வினா நிகழ்வு- - மாலை 5:00 மணி. இடம்: திருமுருகன் திருமண மண்டபம், வெங்கடாபுரம், அம்பத்துார்.