ADDED : ஜன 19, 2025 12:30 AM
ஆன்மிகம்
பார்த்தசாரதி பெருமாள் கோவில்
பரமபதவாசல் திறப்பு, காலை 9:00 மணி, பெருமாள் திருமஞ்சனம், காலை 9:45 மணி. நம்மாழ்வார் பெரிய மாடவீதி புறப்பாடு, மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில்
சஷ்டியை முன்னிட்டு, சிங்காரவேலர் அபிஷேகம், மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
உபன்யாசம்
சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண, 100 நாள் உபன்யாசம், மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.
சிவசுப்ரமணிய சுவாமி கோவில்
சஷ்டி அபிஷேகம், காலை 6:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம், மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.
காரணீஸ்வரர் கோவில்
நாகராஜன் குழுவினரின் துாய்மை பணி, காலை 8:00 மணி முதல். இடம்: சைதாப்பேட்டை.
அர்க்கீஸ்வரர் கோவில்
திருவாசகம் ஒப்புவித்தல், காலை 6:00 மணி முதல் மாலை வரை. இடம்: சூரியம்மன் கோவில் வளாகம், பம்மல்.
அகத்தீஸ்வரர் கோவில்
குமரவேல் குழுவினரின் 156வது உழவாரப்பணி, காலை 8:00 மணி முதல். இடம்: பொன்னேரி.
இஸ்கான்
மதுரா மகோற்சவ கீர்த்தனை விழா, காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: இ.சி.ஆர்., அக்கரை.