/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக ... (20.07.2025) சென்னை
/
இன்று இனிதாக ... (20.07.2025) சென்னை
ADDED : ஜூலை 19, 2025 11:13 PM
ஆன்மிகம்
சங்கீத சமர்ப்பணம்
நந்திகேஸ்வரர் தாளவித்யாலயா 30ம் ஆண்டு விழாவை ஒட்டி மாணவர்களின் இசை கச்சேரி, பங்கேற்பு: ஈரோடு திருஞானசம்பந்தம் மடம், ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள், மாலை 6:30 மணி. இடம்: காமாட்சி கல்யாண மண்டபம், குரோம்பேட்டை கல்ச்சுரல் அகாடமி, இந்திரா காந்தி குறுக்கு தெரு, ராதா நகர், குரோம்பேட்டை.
சத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு விழாவை ஒட்டி நந்திகேஸ்வரர் தாளவித்யாலயா மாணவர்களின் இசை கச்சேரி, காலை 9:45 மணி. இடம்:
தேவி கருமாரி அம்மன் கோவில்
ஆடி மாத 20ம் ஆண்டு தீமிதி திருவிழா, மதியம் 12:00 மணி. இடம்: திருமுல்லைவாயில்.
பார்த்தசாரதி கோவில்
ஆண்டாள் திருப்பாவை சேவை-காலை 8:45 மணி. ஆண்டாள் சின்ன மாடவீதி புறப்பாடு-மாலை 5:30 மணி. திருமங்கையாழ்வார் ஆஸ்தானம்-மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில்
கிருத்திகை முன்னிட்டு, சிங்காரவேலர் திருவீதி உலா-மாலை 6:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
அர்க்கீஸ்வரர் கோவில்
திருவாசகம் ஒப்புவித்தல், காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: சூரியம்மன் கோவில் வளாகம், பம்மல்.
யோகி ராம் சூரத்குமார் ஸத் சங்கம்
திருவண்ணாமலை திருமுறை பதிக விண்ணப்பம், நடராஜன் ஷியாம் சுந்தர், பாவார்த்த அபங்கபஜன், வித்யா ஷியாம் சுந்தர் - மாலை 4:00 மணி முதல். இடம்: 69, எல்லையம்மன் கோவில் தெரு, மேற்கு மாம்பலம்.
* சிவசுப்ரமணிய சுவாமி கோவில்: கிருத்திகை அபிஷேகம், காலை 6:00 மணி, ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம், மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை
*சிவன் சார் யோக சபை
உபன்யாசம், சதாசிவ பிரமேந்திராள் சரித்திரம், கோவிந்தபுரம் பாலாஜி பாகவதர், மாலை 6:00 மணி. இடம்: 10வது தெரு, நங்கநல்லுார்.
நாகாத்தம்மன் கோவில்
பாலமுருகனுக்கு அபிஷேக அலங்காரம், சுவாமி உள்புறப்பாடு, மாலை 6:00 மணி முதல். இடம்: அய்யன் குளக்கரை, நாராயணபுரம், பள்ளிக்கரணை.
பாலசுப்ரமணிய சுவாமி கோவில்
ஆடி கிருத்திகை, சிறப்பு தரிசனம், காலை முதல். இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.
திருவேட்டீஸ்வரர் கோவில்
மூர்த்தி நாயனார், புகழ் சோழ நாயனார் குருபூஜை, மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
குரு பூஜை விழா
காலை 10:00 மணி. இடம்: வீராத்தம்மன் கோவில், ஜல்லடியன்பேட்டை.
பொது
புத்தக கண்காட்சி
திரில்லர், ரொமான்ஸ், பயோகிராப்பி என பலதரப்பட்ட, 10 லட்சம் புத்தகங்கள் அடங்கிய கிலோ புத்தக கண்காட்சி, காலை 10:00 மணி. இடம்: கத்திப்பாரா அர்பன் ஸ்கெயர், கிண்டி.
கலா உத்சவம்
கைவினைப் பொருட்கள், கைத்தறி ஆடைகள் உள்ளிட்டவையுடன், 100 அரங்கங்கள் உடைய கலா உத்சவம், காலை 11:00 மணி. இடம்: சி.இ.ஆர்.சி., வளாகம், திருவான்மியூர்.
ஓவியப்போட்டி
சிறார் முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ - மாணவியருக்கு மாநில அளவிலான ஓவியப்போட்டி, காலை 11:30 மணி. இடம்: டெகத்லான் ஸ்போர்ட்ஸ் இந்தியா, ராஜிவ்காந்தி சாலை, பெருங்குடி.
பெசி ரீட்ஸ்
கடல் அலை ஓசையுடன் அமைதியான சூழலில், 'பெசி ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு, காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: காஜ் ஸ்மித் மெமோரியல், பெசன்ட் நகர்.
உபன்யாசம்
அன்றாட வாழ்வில் ஆன்மிகம், முனைவர் வெங்கடேஷ், மாலை 6:30 மணி. இடம்: அய்யாவு மஹால், பழைய லட்சுமி திரையரங்கு அருகில், அமைந்தகரை.
இசை நிகழ்ச்சி
லக்ஷ்மன் ஸ்ருதி இன்னிசை நிகழ்ச்சி, மாலை 6:05 மணி. இடம்: காமராஜர் அரங்கம், அண்ணா சாலை, தேனாம்பேட்டை.
இலவச மருத்துவ முகாம்
கண், எலும்பு மற்றும் தோல் மருத்துவம், காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை. இடம்: போவ் ஆரோவ் பள்ளி, மருதுபாண்டியர் அவென்யூ, கோவிலம்பாக்கம்.
இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம், : காலை 9:00 மணி. இடம்: கே.சி.எஸ் காசி நாடார் பார்ட்டி ஹால், பட்டாபிராம்.
இலவச நரம்பியல் சிறப்பு மருத்துவ முகாம், தலைமை: நரம்பியல் சிறப்பு மருத்துவர் இ.நடராஜன், காலை 9:00 மணி முதல். இடம்: சன் ஷைன் பன்னோக்கு சிறப்பு கிளினிக், எண்: 31/11, ஜி.ஏ.ரோடு, பழைய வண்ணாரப்பேட்டை.