ADDED : அக் 25, 2025 11:21 PM
கந்தசஷ்டி விழா முருகன் கோவில் லட்சார்ச்சனை, காலை 7:00 மணி, மங்களகிரி வாகனத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி புறப்பாடு, இரவு 7:30 மணி. இடம்: வடபழனி.
அறுபடை வீடு முருகன் கோவில் லட்சார்ச்சனை காலை 7:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை, சுவாமி கோவில் உலா, இரவு 7:40 மணி. இடம்: பெசன்ட் நகர்.
தியாகராஜ சுவாமி கோவில் கந்த சஷ்டி உற்சவத்தின் நான்காம் நாளில், தண்டாயுதபாணி சுவாமி மாடவீதி புறப்பாடு, மாலை 6:30 மணி. இடம்: தேரடி, திருவொற்றியூர்.
ஆதிபுரீஸ்வரர் கோவில் சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி. சிறப்பு அலங்காரம், மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
குமரன் குன்றம் சிறப்பு அபிஷேகம், காலை 10:00 மணி, சக்தியிடம் வேல் வாங்குதல் அலங்காரம், மாலை 5:00 மணி. இடம்: குரோம்பேட்டை.
கங்கை அம்மன் கோவில் முருகனுக்கு பாலாபிஷேகம், மாலை 5:00 மணி. இடம்: ஜல்லடியன்பேட்டை.
சிவசுப்ரமணிய சுவாமி கோவில் வாசனை திரவிய அபிஷேகம், 1,008 போற்றி அர்ச்சனை, மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.
அஷ்டலட்சுமி கோவில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயம், மாலை 6:00 மணி. இடம்: பெசன்ட் நகர்.
பொது சொற்பொழிவு பாரதி பாசறையின், 158ம் மாத திருப்புகழ் சொற்பொழிவு, திருப்புகழ் வகுப்புகள் என்ற தலைப்பில் முனைவர் மா.கி.ரமணன் உரை, காலை 10:00 மணி. இடம்: திருப்புகழ் சபை, கிராமத்தெரு, திருவொற்றியூர்.

