/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக ... (28.06.2025) சென்னை
/
இன்று இனிதாக ... (28.06.2025) சென்னை
ADDED : ஜூன் 28, 2025 01:26 AM
ஆன்மிகம்
சீனிவாச பெருமாள் கோவில்
ஆனி திருமஞ்சனம், காலை 7:30 மணி, கம்ப ராமாயண சொற்பொழிவு, தேரழுந்துார் புலவர் அரங்கராசன், மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.
பாலசுப்ரமணிய சுவாமி கோவில்
சொற்பொழிவு, திருச்சி வி.ரவிசங்கர், மாலை 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.
சவுந்தரேசுவரர் கோவில்
பிரம்மோத்சவம்: மங்களகிரி விமானம், காலை 8:00 மணி. யானை வாகனம், இரவு 8:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.
வராஹி கோவில்
பஞ்சாட்சரி யாகம், காலை 8:00 மணி, வராஹி சகஸ்ரநாமம், மாலை 5:00 மணி, அன்னதானம், காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: மயிலாப்பூர்.
ரத யாத்திரை
ஸ்ரீ சத்சாய் சேவா சங்கம் சார்பில், பகவான் ஸ்ரீசய்த சாய் பாபாவின் நுாற்றாண்டு பிறந்த நாள் விழா ரத யாத்திரை - காலை: ஆர்.ஆர்.,புரம், மாலை: தி.நகர்.
பொது
தியான பயிற்சி
ஆழ்நிலை தியான பயிற்சி வகுப்புகள் துவக்கம், மாலை 6:00 மணி. இடம்: மகரிஷி வித்யா மந்திர், 28, டாக்டர் குருசாமி சாலை, சேத்துப்பட்டு.
ஆடை, ஆபரண கண்காட்சி
ஹஸ்தகலா சார்பில் ஆடைகள், ஆபரண பல்பொருள் கண்காட்சி, காலை 11:00 மணி. இடம்: அரசு அருங்காட்சியகம், பாந்தியன் சாலை, எழும்பூர்.
கட்டுமான கண்காட்சி
கட்டுமானம் மற்றும் வீடுகளின் உட்கட்டமைப்பை அழகுபடுத்தும் பிரிவிற்கான சிறப்பு கண்காட்சி, காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
பசுமை தோட்ட கண்காட்சி
பசுமைத் தோட்டம் மற்றும் இயற்கை காட்சிகள் எனும் கண்காட்சி, காலை 10:00 மணி. இடம்: அரங்கம் - 2, சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
இசை, கண்காட்சி
பன்னாட்டு இசை நிகழ்ச்சியுடன் பாரம்பரிய உணவு, ஆடைகள், பொருட்கள் கண்காட்சி, மாலை 6:30 மணி, அனுமதி இலவசம், இடம்: ஏ.எப்., மெட்ராஸ், நுங்கம்பாக்கம்.
டவர் ரீட்ஸ்
அமைதியான சூழலில், 'டவர் ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு, காலை 6:30 மணி முதல். இடம்: டவர் பூங்கா, அண்ணா நகர்.
ஆர்.டி.ஐ., இலவச பயிற்சி முகாம்
மக்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில், தகவல் அறியும் சட்டம் குறித்த இலவச பயிற்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் சந்திப்பு கூட்டம், காலை 10:00 மணி முதல். இடம்: எஸ்.சி.எஸ்., மெட்ரிக் பள்ளி, குரோம்பேட்டை.