ADDED : அக் 28, 2025 12:26 AM
கந்தசஷ்டி விழா முருகன் கோவில் மகா கந்தசஷ்டியை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாணம்- - இரவு 7:00 மணி. மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு- - இரவு 8:00 மணி. இடம்: வடபழனி.
அறுபடை வீடு முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, தேவசேனை திருக்கல்யாண உத்சவம்- - மாலை 6:00 மணி. இடம்: பெசன்ட் நகர்.
கபாலீஸ்வரர் கோவில் மகா கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, சிங்காரவேலர் திருக்கல்யாண உத்சவம் - -இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
கற்பக விநாயகர் கோவில் சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை -- காலை 6:00 மணி. திருக்கல்யாணம் - -காலை 8:00 மணி. சுவாமி வீதியுலா -- மாலை 6:00 மணி. இடம்: பாண்டுரங்கன் சாரதாம்பாள் கோவில், சாந்தி நகர், ஆதம்பாக்கம்.
குமரன் குன்றம் முருக பெருமானுக்கு திருக்கல்யாணம் -- காலை 10:30 மணி. இடம்: குரோம்பேட்டை.
சொற்பொழிவு திருவொற்றியூர் திருப்புகழ் சபை சார்பில், 84ம் ஆண்டு சஷ்டி விழா - முனைவர் மா.கி.ரமணனின் 'திருமுறைகளில் திருமுருகன்' சொற்பொழிவு - இரவு 7:00 மணி. இடம்: உடையார் மாளிகை, வடக்கு மாடவீதி, திருவொற்றியூர்.
ஓம் கந்தாஸ்ரமம் சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை -- காலை 10:00 மணி. திரிசதி பூஜை -- மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
தியாகராஜ சுவாமி கோவில் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் - மாலை 6:30 மணி. இடம்: தேரடி, திருவொற்றியூர்.
திருக்கோட்டம் திருமுருகன் கோவில் வள்ளி, தேவசேனா உடனுறை சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் - காலை 10:00 மணி. இடம்: சரஸ்வதி நகர், கலைவாணர் நகர், திருவொற்றியூர்.

