PUBLISHED ON : செப் 30, 2025 12:00 AM
- ஆன்மிகம் -
* பார்த்தசாரதி கோவில்
வேதவல்லி தாயார் லட்சார்ச்சனை - -மாலை 4:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
* கபாலீஸ்வரர் கோவில்
நவராத்திரி ஒன்பதாம் நாள் கற்பகாம்பாள் காமாட்சி சிவபூஜை அலங்காரம்- - மாலை 6:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
* முருக பெருமான் கோவில்
'சக்தி' கொலுவை முன்னிட்டு, உற்சவர் அம்பாளுக்கு சரஸ்வதி அலங்காரம்- - மாலை 6:00 மணி. ஹேம மீனாட்சி இசை நிகழ்ச்சி - -மாலை 6:00 மணி. அமிர்தவர்ஷினி குழுவினர் பக்தி பாடல்கள்- - இரவு 7:00 மணி. இடம்: வடபழனி.
* சிருங்கேரி பாரதி வித்யாஷ்ரமம்
சிருங்கேரி பாரதி வித்யாஷ்ரமத்தில் சாரதா சரண் நவராத்திரி மகோத்சவத்தை முன்னிட்டு சிம்ம வாகன அலங்காரம் - -மாலை 6:00 மணி. இடம்: தி.நகர்.
* வடிவுடையம்மன் கோவில்
நவராத்திரி விழாவில் உற்சவ தாயார் மஹிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதி உற்சவம் ----- இரவு 7:00 மணி - தேரடி, திருவொற்றியூர்.
* ஆதிபுரீஸ்வரர் கோவில்
அம்பாளுக்கு சரஸ்வதி அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
* நாகாத்தம்மன் கோவில்
சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை -- மாலை 6:00 மணி. இடம்: அய்யன்குளக்கரை தெரு, நாராயணபுரம்.
* கங்கை அம்மன் கோவில்
சிறப்பு அலங்காரம் -- மாலை 5:00 மணி முதல். இடம்: ஊத்துக்குளம் கரை, ஜல்லடியன்பேட்டை.
* ஓம்கந்தாஸ்ரமம்
ராஜராஜேஸ்வரி அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
* சர்வ சித்தி விநாயகர் கோவில்
ராஜராஜேஸ்வரி அலங்காரம் - - மாலை 6:00 மணி. இடம்: பார்சன் நகர், வி.ஜி.பி., சாலை, சைதாப்பேட்டை.
* கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
பரமேஸ்வரி அலங்காரம்- - மாலை 6:00 மணி. இடம்: அரசன் கழனி, ஒட்டியம்பாக்கம்.
*வராகி அறச்சபை: சிறப்பு அபிஷேகம் - மாலை 6:00 மணி. இடம்: எஸ்.எஸ்.மகால் வளாகம், பள்ளிக்கரணை.
- பொது -
* பொம்மை கொலு கண்காட்சி
நவராத்திரி முன்னிட்டு பூம்புகார் நிறுவனம் சார்பில் கொலு பொம்மை கண்காட்சி - -காலை 10:00 மணி. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணாசாலை.
* சதுரங்க போட்டி
பா.ஜ., வடசென்னை கிழக்கு மாவட்ட கல்வியாளர் பிரிவு சார்பில், பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி, பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி - காலை 9:30 மணி. இடம்: ருக்மணி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சண்முகபுரம், திருவொற்றியூர்.