ADDED : செப் 07, 2025 01:55 AM
ஆன்மிகம் பார்த்தசாரதி பெருமாள் கோவில் பவித்ர உத்சவத்தை முன்னிட்டு, பார்த்தசாரதி பெருமாள் திருமஞ்சனம், காலை 8:30 மணி, பேயாழ்வார் திருநட்சத்திர விழா, மாலை 4:15 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில் பவுர்ணமியை முன்னிட்டு, கபாலீஸ்வர சுவாமிக்கு சர்க்கரை சார்த்துதல், மாலை 5:30 மணி, சந்திரசேகரர் வீதி உலா, இரவு 7:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
ஜெய் பிரத்யங்கிரா பீடம் பவுர்ணமி புஷ்பாஞ்சலி, ஜாதக சுபத்துவ பூஜை, மதியம் 1:30 முதல் 3:00 மணி வரை. இடம்: வெண்பாக்கம் மலையடிவாரம், சிங்க பெருமாள் கோவில் வழி, வெங்கடாபுரம்.
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பவுர்ணமி அவுடத சித்தர் மலை கிரிவலம், மாலை 5:00 மணி. இடம்: அரசன் கழனி, ஒட்டியம்பாக்கம்.
நாகாத்தம்மன் கோவில் பவுர்ணமி அம்பாளுக்கு அபிஷேக அலங்கார ஆராதனை, உள்புறப்பாடு, மதியம் 3:00 மணி முதல். இடம்: குளக்கரை தெரு, நாராயணபுரம், பள்ளிக்கரணை.
பதங்கீஸ்வரர் கோவில் போரூர் நாகராஜன் தலைமையிலான 141வது துாய்மை பணி, காலை 8:00 மணி முதல். இடம்: செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலை, பாலுார்.
திருவீதி அம்மன் கோவில் சத்யானந்தா யோகா மையத்தின் இலவச யோகா வகுப்பு, காலை 5:30 மணி முதல். இடம்: வேளச்சேரி.
பொது இலவச மருத்துவ முகாம் பா.ம.க., மற்றும் தீபம் மெட்பர்ஸ்ட் நடத்தும் முகாம், காலை 10:00 மணி முதல். இடம்: மோகன் பார்ட்டி ஹால், அரசு மேல்நிலைப் பள்ளி எதிரில், பள்ளிக்கரணை.
இலக்கிய வட்டம் நிகழ்ச்சி இலக்கிய வட்டம் நடத்தும் புலவர் ந.ரா.முருகவேள் நுாற்றாண்டு விழா, காலை 10:00 மணி. இடம்: அரசு மேல்நிலை பள்ளி, எம்.ஜி.ஆர்., நகர், கே.கே.நகர் பேருந்து நிலையம் அருகில்.
சித்தர் இலக்கிய மைய கருத்தரங்கம் மருந்தில் மருத்துவம், கருவூரார் சித்தர், சித்தர் பாடல்களில் பண்பாட்டு கூறுகள் தலைப்புகளில் கருத்தரங்கம். இடம்: சாய் முருகன் டிரஸ்ட், ரங்கராஜபுரம் பிரதான சாலை, கோடம்பாக்கம்.