ஆன்மிகம் தருமபுரம் ஆதீன சமய பிரசார நிலையம் அரனருள் 21ம் ஆண்டு பன்னிரு திருமுறை, 5வது நாள் திலகவதியார் விழா. நடராஜர், நால்வர் திருமுறை வழிபாடு. பாராயணம், இசை அரங்கம், சொற்பொழிவு - காலை 8:30 முதல் இரவு 7:30 மணி. இடம்: வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர்.
ஆதிபுரீஸ்வரர் கோவில் காரிய நாயனார் குருபூஜை - இரவு 7:00 மணி. பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
திருவேட்டீஸ்வரர் கோவில் காரிய நாயனார் குரு பூஜை - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
காமாட்சி அம்மன் கோவில் உலக நன்மைக்காக, சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ஹோமம் - மாலை 4:00 மணி முதல். இடம்: சங்கர மடம், மேற்கு மாம்பலம்.
தேவி கருமாரியம்மன் கோவில் ராகு கால வழிபாடு - காலை 10:30 மணி. இடம்: புதுநகர் 3வது தெரு, ஜல்லடியன்பேட்டை.
பொது சுற்றுலா தொழில் பொருட்காட்சி இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி - மாலை 4:00 மணி. இடம்: சென்னை தீவுத்திடல்.
உணவு வர்த்தக திருவிழா நுார் - -ரம்ஜான் எனும் பெயரில், உணவு மற்றும் வர்த்தக திருவிழா - மாலை 3:00 மணி முதல். இடம்: ஒய்.எம்.சி.ஏ., வளாகம், ராயப்பேட்டை.
தொழில்முனைவோர் கண்காட்சி தொழில் முனைவோர் சார்ந்த கண்காட்சி, பயிற்சி வகுப்பு - காலை 9:00 மணி. இடம்: பெதர்ஸ் ஏ ராதா ஹோட்டல், மணப்பாக்கம்.
கண்காட்சி சர்வதேச ரயில் பெட்டிகள் கண்காட்சி - காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: ஐ.சி.எப்., பெரம்பூர்.

