ADDED : மார் 14, 2026 04:59 AM
ஆன்மிகம் தருமபுரம் ஆதீன சமய பிரசார நிலையம் அரனருள் 21ம் ஆண்டு பன்னிரு திருமுறை, 6வது நாள் திருநாவுக்கரசர் விழா. பாராயணம், இசை அரங்கம் - காலை 8:30 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர்.
சொற்பொழிவு ஆன்மிக பேச்சாளர் சுவாமிநாதனின், மகான்கள் குறித்த சொற்பொழிவு, மாலை 5:30 மணி, இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்
பொது நுால் வெளியீட்டு விழா ஞானமாருதி த.புருஷோத்தமன் எழுதிய 'ஆன்மிக களஞ்சியம்' நுால் வெளியீடு - காலை 10:00 மணி. இடம்: எஸ்.எஸ்., மஹால், பள்ளிக்கரணை.
உணவு வர்த்தக திருவிழா நுார் - இ - ரம்ஜான் எனும் பெயரில் உணவு மற்றும் வர்த்தக திருவிழா- - மாலை 3:00 மணி. இடம்: ஒய்.எம்.சி.ஏ., வளாகம், ராயப்பேட்டை.
சர்வதேச ரயில் பெட்டிகள் கண்காட்சி ஐ.சி.எப்.,பில் காலை 10:00 முதல் மாலை 6:00 மணி. இடம்: பெரம்பூர்.
தொழில் கண்காட்சி தொழில்முறை ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்கள் குறித்த கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம் .
விவேகானந்தா பயிலகம் தமிழ்க் கூடல் களப்பணி குழுவின் கலந்துரையாடல் -- இரவு 7:00 மணி. இடம்: சூரியா நகர், மேடவாக்கம்.
இசை நிகழ்ச்சி குல்சாரின் கவிதைகளுடன் கூடிய உத்கர்ஷ் சர்மாவின் இசை நிகழ்ச்சி - -மாலை 6:30 மணி. இடம்: விக்டோரியா ஹால், சென்னை.
