தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : மார் 22, 2026 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2026 05:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு மிருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம் - -மாலை 5:30 மணி. வெள்ளி மூஷிக வாகன புறப்பாடு- - இரவு 10:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

அயோத்யா அஸ்வமேத மஹா மண்டபம் ராமநவமி மஹோத்சவத்தில், தாமல் ராமகிருஷ்ணன், அவரது சகோதரி பெருந்தேவியின் வால்மீகி ராமாயண உபன்யாசம் - தலைப்பு: பாதுகா பட்டாபிஷேகம் - இரவு 7:00 மணி. இடம்: மேற்கு மாம்பலம்.

ஆண்டாளம்மாள் மடம் ராமநவமியை முன்னிட்டு உ.வே.அத்தங்கி ஸ்ரீநிவாஸாசார்யார் சுவாமியின் உபன்யாசம் - ஜடாயு மோட்ஷம் - மாலை 6:45 மணி. இடம்: சஞ்சீவிராயன் கோவில் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை.

வேதபுரீஸ்வரர் கோவில் தேசிய ஹிந்து கோவில்கள் பவுண்டேஷன் சார்பில் உழவாரப்பணி -- காலை 8:00 மணி முதல். இடம்: திருவேற்காடு.

அபயம் ராம ஜனனம் சொற்பொழிவு: செல்வி அனன்யா ஹரிஹரன் -- மாலை 5:00 மணி. இடம்: யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம், கபாலி நகர், கூடுவாஞ்சேரி.

வினைதீர்த்த விநாயகர் கோவில் குமரவேல் தலைமையில் கயிலாய வாத்திய பயிற்சி -- காலை 10:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

ஓதுவாமூர்த்திகள் கவுரவித்தல் பி.எஸ்., மேல்நிலைப்பள்ளி - காலை 9:30 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: தட்சிணாமூர்த்தி அரங்கம், மயிலாப்பூர்.

கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் ராம நவமி உற்சவத்தின் நான்காம் நாளில் ராம பிரான், நாக வாகனத்தில் எழுந்தருளி மாடவீதி உத்சவம் -- இரவு 7:00 மணி. இடம்: காலடிப்பேட்டை, திருவொற்றியூர்.

சென்னை அரவிந்தர் சொசைட்டி கூட்டு தியானம் - காலை 10:00 மணி. இடம்: முதல் அவென்யூ, 100 அடி சாலை, அசோக் நகர்.

பொது நுால் வெளியீட்டு விழா தாமரை பிரதர்ஸ் வெளியிடும் ராம. ரவிச்சந்திரன் எழுதிய 'காஞ்சி மஹாஸ்வாமி மதுரமாலை' நுால் அறிமுகம். பங்கேற்பு: ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி, பி.சுவாமிநாதன், முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் -- காலை 10:00 மணி. இடம்: பாரதிய வித்யா பவன், மயிலாப்பூர்.

நுால் வெளியீட்டு விழா 'வெட்கப்படும் நெற்கதிர்' நுால் வெளியீட்டு விழா - -காலை 10:00 மணி. இடம்: இந்திய அலுவலர் சங்க திருவள்ளுவர் அரங்கம், திரு.வி.க., நெடுஞ்சாலை, ராயப்பேட்டை.

சுற்றுலா கண்காட்சி பயணம் மற்றும் சுற்றுலா கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

வாகன கண்காட்சி சொகுசு மற்றும் பிரீமியம் கார்களுக்கான சிறப்பு கண்காட்சி - -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

பர்னீச்சர் கண்காட்சி வீடுகளில் மரப்பொருட்களாக அலங்கரிக்கும் பிரமாண்ட பர்னீச்சர் கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

ஆடை, ஆபரண கண்காட்சி ஹஸ்தகலா சார்பில் ஆடை, ஆபரண பொருட்கள் கண்காட்சி - -காலை 11:00 மணி. இடம்: சி.இ.ஆர்.சி., கண்காட்சி வளாகம், கலாஷேத்ரா சாலை, திருவான்மியூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us