/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக ...(26.12.2025) சென்னை
/
இன்று இனிதாக ...(26.12.2025) சென்னை
ADDED : டிச 26, 2025 05:09 AM
ஆன்மிகம் பார்த்தசாரதி பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தில், பகாசுரவதம் திருக்கோலம் உள்புறப்பாடு - -மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில் கற்பகாம்பாள் ஆலய பிரஹார விழா- - மாலை 4:30 மணி. திருவெம்பாவை திருவிழா மூன்றாம் நாள் மாணிக்கவாசகர் திருவீதி உலா- - இரவு 7:00 மணி. சிவமாதவன் சொற்பொழிவு- - இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
மண்டல மகர விளக்கு விழா அய்யப்ப பக்த போஜனம் - -காலை 11:30 மணி. பூ மூடல் - -மாலை 6:30 மணி. கற்பூரஜோதி- - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீஅய்யப்பன் கோசாலை கிருஷ்ணன் கோவில், கே.கே., நகர்.
அஷ்டலட்சுமி கோவில் அபிஷேகம் - காலை 6:00 மணி. சிறப்பு வழிபாடு - மாலை 4:00 மணி. இடம்: பெசன்ட் நகர்.
சிவசுப்ரமணிய சுவாமி கோவில் சுக்ரவார பூஜை - காலை 6:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.
மருந்தீஸ்வரர் கோவில் திருவெம்பாவை சொற்பொழிவு - பி.திருச்சிற்றம் பலம் - இரவு 7:00 மணி. இடம்: தேவாசிரியன் திருமுறை மண்டபம், திருவான்மியூர்.
வராஹி அறச்சபை அபிஷேகம் - காலை 6:00 மணி. சிறப்பு அலங்காரம் - மாலை 5:00 மணி. இடம்: எஸ்.எஸ்., மஹால் வளாகம், பள்ளிக்கரணை.
காரணீஸ்வரர் கோவில் ஆன்மிக சொற்பொழிவு: மனசை மூர்த்தி - மாலை 6:30 மணி. இடம்: சைதாப்பேட்டை.
கைலாசநாதர் கோவில் நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. மாலை 5:00 மணி. இடம்: திருப்போரூர்.
யோக ஹயக்ரீவர் கோவில் சிறப்பு அபிஷேகம், பூஜை: காலை 6:15 மணி, மாலை 6:30 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.

