/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக ...(31.05.2025) சென்னை
/
இன்று இனிதாக ...(31.05.2025) சென்னை
UPDATED : மே 31, 2025 02:20 AM
ADDED : மே 31, 2025 01:49 AM
ஆன்மிகம்
பார்த்தசாரதி கோவில்
நம்மாழ்வார் திருமஞ்சனம் - காலை 9:30 மணி. பார்த்தசாரதி பெருமாள் சின்ன மாடவீதி புறப்பாடு -- -மாலை 5:00 மணி. வசந்த உத்சவம்- - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
தேனுபுரீஸ்வரர் கோவில்
பிரம்மோத்சவ விழா கொடியேற்றம் - காலை 6:00 - 7:30 மணி. தொட்டி உத்சவம் பஞ்சமூர்த்திகள் வீதி உலா - காலை 8:00 மணி. இடம்: மாடம்பாக்கம்.
பொது
பிரம்ம குமாரிகள்
பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில், 'உன்னால் முடியும்'- இளைஞர்களுக்கு நம்பிக்கை மற்றும் ஊக்கத்தை உருவாக்கும் நிகழ்ச்சி - காலை 8:00 மணி. இளம் துளிர்களின் 'கலை மழை' தமிழ் பண்பாட்டை கவுரவிக்கும் நிகழ்ச்சி - மாலை 5:30 மணி. இடம்: சனந்தா திருமண மண்டபம், ராஜகீழப்பாக்கம்.
ஹஸ்தகலா கண்காட்சி
ஆடை, அணிகலன்களின் கண்காட்சி- - முற்பகல் 11:30 மணி. இடம்: சி.இ.ஆர்.சி., கண்காட்சி மைதான வளாகம், திருவான்மியூர்.
பர்னிச்சர் கண்காட்சி
86 பர்னிச்சர் நிறுவனங்கள், ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைந்து நடத்தும் கண்காட்சி - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
சர்வதேச 'ஷாப்பிங்' திருவிழா
உலகின் பல்வேறு நாடுகளின் பாரம்பரிய பொருட்களின் கண்காட்சி - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
ருத்ராக்ஷம் கண்காட்சி
பல முகங்கள், நன்மைகள் கொண்ட ருத்ராக் ஷம் கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை.
இசை நிகழ்ச்சி
மறைந்த பாடகி ஜிக்கி எனும் கிருஷ்ணவேணியின் பாடல்கள் பாடும் நிகழ்ச்சி, பங்கேற்பு: மணிவண்ணன், சுந்தர், 'நல்லி' குப்புசாமி, மாலை 6:15 மணி முதல். இடம்: விவேகானந்தா அரங்கு, பி.எஸ்.மேல்நிலைப் பள்ளி, ஆர்.கே.மடம் சாலை, மயிலாப்பூர்.
உபன்யாசம்
தாம்பரம் ஆஸ்திக சபா, தலைப்பு - பக்த கபிர்தாஸ், நிகழ்த்துபவர் - கிருத்திகா பரத்வாஜ், மாலை 6:45 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளி, கிழக்கு தாம்பரம்.
* பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்
அபிஷேக அலங்கார ஆராதனை -- காலை 9:00 மணி. இடம்: கவுரிவாக்கம்.
* சீனிவாசப் பெருமாள் கோவில்
தேரழுந்துார் அரங்கராசனின் கம்ப ராமாயணம் -- மாலை 6:30 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.
* திருவேட்டீஸ்வரர் கோவில்
நமிநந்தி அடிகள் நாயனார் குருபூஜை -- மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
* ஆதிபுரீஸ்வரர் கோவில்
நமிநந்தி அடிகள் குருபூஜை -- இரவு 7:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
- பொது -
* சுயம்வர மங்கள விழா
தலைசிறந்த கைராசியான திருமண அமைப்பாளர்கள், இணைந்து நடத்தும் மாபெரும் சுயம்வர மங்கள விழா. இடம்: கபாலி கல்யாண மண்டபம், காந்தி ரோடு,வேளச்சேரி. தொடர்புக்கு: 90438 65583, 99623 54315.