ADDED : செப் 01, 2026 06:34 PM
ஆன்மிகம்
பார்த்தசாரதி பெருமாள் கோவில்
திருவாரதனம், -காலை 6:15 மணி. நித்யானுசந்தானம், -மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில்
சஷ்டி முன்னிட்டு, சிங்காரவேலர் அபிஷேகம், -மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
திருநீகண்டேஸ்வரர் கோவில்
சிவ சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் சஷ்டி அபிஷேகம்,- காலை 6:00 மணி, கந்தர் அலங்காரம், -மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.
ஓம் கந்தாஸ்ரமம்
சுவாமிநாத சுவாமிக்கு சஷ்டி அபிஷேகம்,- காலை 10:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்
வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியருக்கு அபிஷேகம்,- காலை 9:00 மணி. இடம்: கல்லுாரி சாலை, கவுரிவாக்கம்.
பாலசுப்ரமண்ய சுவாமி சத்சங்கம்
மதுராந்தகம் குமார் வழங்கும், ஆன்மிக சொற்பொழிவு, மாலை 6:30 – இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.
வேணுகோபால சுவாமி கோவில்
கிருஷ்ண ஜெயந்தி மகோத்சவம் முன்னிட்டு, ஸ்ரீ கிருஷ்ணா பிருந்தாவனம் அலங்கார ஏற்பாடு, மாலை 6:30 – இரவு -8:30 மணி வரை. இடம்: 2வது தெரு, கோபாலபுரம்.
பொது
கிருஷ்ண தர்ஷன் கண்காட்சி
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பூம்புகார் விற்பனையகத்தில் கிருஷ்ண தர்ஷன் கைத்தறி உள்ளிட்ட பொருட்கள் விற்பனை, -காலை 10:00 மணி. இடம்: அண்ணா சாலை, சென்னை.
வணிக வாய்ப்பு மாநாடு
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கொள்முதல் மற்றும் வணிக வாய்ப்புகள் குறித்த மாநாடு, -காலை 9:30 மணி. இடம்: சி.ஐ.ஐ., அலுவலகம், வேளச்சேரி பிரதான சாலை, கிண்டி.
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, வி.சி.க., சார்பில் அரசு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், காலை 9:00 மணி. இடம்-: செம்மஞ்சேரி பிரதான நுழைவு வளைவு அருகில், செம்மஞ்சேரி.
