ADDED : செப் 11, 2026 02:15 AM
ஆன்மிகம் தருமபுர ஆதீன சமய பிரசார நிலையம் திருப்புகழ் இலவச வகுப்பு நடத்துபவர்: வீ.கலைச்செல்வன் -- மாலை 5:30 மணி. இடம்: வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர்.
காவேரி விநாயகர் கோவில் பிரம்மோத்சவ விழாவில், வேங்கட்ரமணியின் 'விநாயகர் அவதார நோக்கம்' சிறப்பு சொற்பொழிவு - மாலை 6:30 முதல் 8:00 மணி வரை. இடம்: காவேரி வினாயகர் ஆலயம், சாலிக்கிராமம்.
வேணுகோபால சுவாமி கோவில் சுவாமி பிரதிஷ்டை வைபவம் மற்றும் ஸ்ரீ விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகருக்கு அபிஷேகம் - காலை 7:00 மணி, சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் வெண்ணை காப்பு - மாலை 7:00 மணி. இடம்: இரண்டாவது தெரு, கோபாலபுரம்.
பால சுப்ரமணிய சுவாமி சத்சங்கம் நன்மங்கலம் செல்வி நிஷாரிகா குழுவினரின் பரதநாட்டியம் - மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.
ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, முருகப் பெருமானுக்கு சத்ரு சம்ஹாரயாகம் சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி. ஸ்ரீமுருகப் பெருமான் வள்ளி, தேவசேனா மயில் வாகனத்தில் ஆலயம் வருதல், மாலை 6:30 மணி. இடம்: வெங்கடேசன் தெரு, மேடவாக்கம்.
பொது ஐஸ்கிரீம் வணிக கண்காட்சி ஐஸ்கிரீம் உற்பத்தித் துறை, குளிரூட்டும் இயந்திரங்கள், 'பேக்கேஜிங்' மற்றும் மூலப்பொருட்கள் சார்ந்த பிரமாண்ட வர்த்தககண்காட்சி - -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
' கணபதி தரிசனம் ' கண்காட்சி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கணபதி தரிசனம் விற்பனை கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: பூம்புகார் விற்பனையம், அண்ணாசாலை, சென்னை.
