UPDATED : ஆக 12, 2026 11:13 PM
ADDED : ஆக 12, 2026 04:23 PM
(13/08/26) ஆன்மிகம்
ஆன்மிகம் வந்தே குருபரம்பராம்
தக் ஷிணாம்னாய சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் சார்பில் லலிதா சகஸ்ரநாமம் - மாலை 5:30 - 6:15 மணி; கச்சேரி மற்றும் உபன்யாசம் மாலை 6:30 - இரவு 8:30 மணி. இடம்: நாரத கான சபா, ஆழ்வார்பேட்டை.
ஆடி சிறப்பு நிகழ்ச்சி
வில்லிபாரதம் தொடர் சொற்பொழிவில் திருச்சி கல்யாணராமனின் 'குந்தியும் கர்ணனும்' சொற்பொழிவு - மாலை 6:30 முதல் 8:00 மணி வரை. இடம்: காஞ்சி மஹா பெரியவா கோவில், பிச்சு பிள்ளை தெரு, மயிலாப்பூர்.
* பார்த்தசாரதி பெருமாள் கோவில்
ஆண்டாள் திருப்பாவை சேவை, -காலை 9:00 மணி. ஆண்டாள் சிறிய தேர் புறப்பாடு, -மாலை 5:30 மணி. திருவாடிப்பூரம் ஒன்பதாம் நாள் விழா, இரவு -9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
* கபாலீஸ்வரர் கோவில்
தெய்வ சேக்கிழார் விழாவை முன்னிட்டு முத்துக்குமரன் ஓதுவாரின் திருமுறை இன்னிசை-, மாலை 5:00 மணி. பனசை மூர்த்தியின் சொற்பொழிவு, -இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
பொது
* பஞ்சாப் பாப் இசை நிகழ்ச்சி
பஞ்சாப் பாப் இசை நிகழ்ச்சி-, இரவு 8:00 மணி. இடம்: ஜவஹர்லால் நேரு அரங்கம், பெரியமேடு, சென்னை.
* உடல் குறித்த கண்காட்சி
உடல் குறித்து ஆராயும் சிந்தனை துாண்டும் சமகால கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: ஏ.எப்., மெட்ராஸ், நுங்கம்பாக்கம்.
