தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (13.09.2026)

இன்று இனிதாக (13.09.2026)

இன்று இனிதாக (13.09.2026)


ADDED : செப் 12, 2026 04:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2026 04:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

வேணுகோபால சுவாமி கோவில்

விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகருக்கு அபிஷேகம், காலை 7:00 மணி. இடம்: இரண்டாவது தெரு, கோபாலபுரம்.

பால சுப்ரமண்ய சுவாமி சத்சங்கம்

கல்கி வைபவம் சொற்பொழிவு, நிகழ்த்துபவர்: ஸ்ரீ மகேஷ், மாலை 6:30 மணி. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.

சக்தி விநாயகர் கோவில்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிவபெருமானுக்கு ருத்ரஹோமம் சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி. சிவன் பார்வதி சிறப்பு அலங்காரத்துடன் தேரோட்டம், மாலை 6:00 மணி. இடம்: வெங்கடேசன் தெரு, மேடவாக்கம்.

ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி

கூட்டு தியானம்-, காலை 10:00 மணி, மாலை 6:30 மணி, குழந்தைகளுக்கான பயிற்சி, மாலை 3:00 மணி. இடம்: அசோக் நகர்.

பார்த்தசாரதி பெருமாள் கோவில்

வரதர் சின்ன மாடவீதி புறப்பாடு, -மாலை 5:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

பொது

செல்வராணி நாட்டியாலயா

பள்ளி சிறுமியரின் பரதநாட்டிய சலங்கை பூஜை, சிறப்பு விருந்தினர் கலை குரு நித்யா கல்யாணி, மாலை 5:00 மணி முதல். இடம்: முத்தமிழ் பேரவை, டி.என்.ராஜரத்னம் கலை அரங்கம், ராஜா அண்ணாமலைபுரம்.

கணபதி தரிசனம் கண்காட்சி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கணபதி தரிசனம் பொருட்கள் விற்பனை, கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: பூம்புகார் விற்பனையம், அண்ணா சாலை.

இலவச மருத்துவ முகாம்

‘சைமா’ சார்பில் இலவச மருத்துவ முகாம், -காலை 8:00 மணி. இடம்: அனுமந்தபுரம், கிருஷ்ணாம்பேட்டை, திருவல்லிக்கேணி.

நுால் வாசித்தல், பரிமாற்ற நிகழ்ச்சி

நுால் வாசித்தல், பரிமாற்ற நிகழ்ச்சி-, காலை 8:00 மணி. இடம்: மாநகராட்சி பூங்கா, செம்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us