ADDED : ஆக 26, 2025 12:36 AM
ஆன்மிகம்
------------
* பார்த்தசாரதி கோவில்
வரதர் மண்டப திருமஞ்சனம்- - காலை 10:30 மணி. கூரத்தாழ்வான், வரதர் ஆஸ்தானம் - -மாலை 6:00 மணி. திருநடைக்காப்பு- -ங இரவு 9:00 மணி. இடம்:திருவல்லிக்கேணி.
* கணபதி தர்ஷன் கண்காட்சி
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 'கணபதி தர்ஷன்' எனும் பெரிய விற்பனை கண்காட்சி- - காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணாசாலை.
* காரணீஸ்வரர் கோவில்
விநாயகர் சதுர்த்தி விழா - விநாயகருக்கு அபிஷேகம் -- காலை 10:30 மணி. திருவீதியுலா -- இரவு 7:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.
* ஓம் கந்தாஸ்ரமம்
சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை -- காலை 10:00 மணி. திரிசதி பூஜை -- மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
* துர்க்கை அம்மன் கோவில்
அம்மனுக்கு ராகு கால பூஜை -- மாலை 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.
* வீராத்தம்மன் கோவில்
விஷ்ணு துர்க்கைக்கு ராகு கால அபிஷேகம் -- மாலை 3:00 மணி முதல். இடம்: ஜல்லடியன்பேட்டை.
* வரசித்தி விநாயகர் கோவில்
விக்னேஸ்வர பூஜை -- மாலை 5:00 மணி. முதல் கால யாக பூஜை, ஹோமம்- - மாலை 6:00 மணி முதல். இடம்: மெயின் ரோடு, வேளச்சேரி.
* சர்வ சித்தி விநாயகர் கோவில்
விநாயகர் சதுர்த்தி விழா. மரகத விநாயகர். பச்சை சாத்தி அலங்காரம். சவுமியா அபிஷேக் ராஜுவின் பக்தி சொற்பொழிவு, மாஸ்டர் சாய் சமர்த் பக்திப்பாடல்கள் -- மாலை 6:00 மணி. இடம்: பார்சன் நகர், வி.ஜி.பி. சாலை, சைதாப்பேட்டை.
***