பெசன்ட் நகரில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வியாபாரிகள் சம்மதம்
பெசன்ட் நகரில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வியாபாரிகள் சம்மதம்
ADDED : பிப் 06, 2026 05:31 AM
பெசன்ட் நகர்: பெசன்ட் நகர் கடற்கரையில் 1,100க்கும் மேற்பட்ட கடைகள் பெருகி, கண்ணுக்கு எட்டும் துாரம் வரை கடை களாக படர்ந்துள்ளன.
உள்ளூர் அரசியல்வாதிகள், கடைகளுக்கான இடங்களை வளைத்து போட்டு, வெளி நபர்களுக்கு வாடகைக்கு விட்டதால், கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்தன.
மெரினா கடற்கரையை போல், பெசன்ட் நகர் கடற்கரையையும் ஒழுங்குப் படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
கடைகளை அகற்று வதற்கான ஆலோசனை கூட்டம், அடையாறு மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், ஊரூர்குப்பம், ஓடைக்குப்பம், ஆல்காட் குப்பத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
அவர்கள் கூறியதாவது:
அரசியல்வாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள கடைகளை அகற்றினால், மூன்று ஊர் மக்கள் முறையாக நடத்தும் கடைகளுக்கு பிரச்னை இருக்காது. அதற்கான நடவடிக்கை தேவை.
முகப்பு பகுதியில் உள்ள, 90 கடைகளை வரும் 8ம் தேதி இரவு வியாபாரம் முடிந்ததும் அகற்றிவிடுகிறோம். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
