தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆக்கிரமிப்பு அகற்றம்: வியாபாரிகள் வாக்குவாதம்

ஆக்கிரமிப்பு அகற்றம்: வியாபாரிகள் வாக்குவாதம்

ஆக்கிரமிப்பு அகற்றம்: வியாபாரிகள் வாக்குவாதம்


UPDATED : ஆக 04, 2026 11:08 PM

ADDED : ஆக 04, 2026 03:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 04, 2026 11:08 PM ADDED : ஆக 04, 2026 03:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரவாயல்: சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிய போது, வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வளசரவாக்கம், ஆற்காடு சாலையையும்-, மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலையையும் இணைக்கும் பிரதான சாலையாக, ஆலப்பாக்கம் சாலை உள்ளது. இச்சாலை, மாநில நெடுஞ்சாலை துறையிடமிருந்து, சென்னை மாநகராட்சியிடம் கடந்தாண்டு ஒப்படைக்கப்பட்டது.

இச்சாலையில் நடைபாதை மற்றும் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, 20க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி, இளநீர், காய்கறி, பிரியாணி கடைகள் ஆகியவை அகற்றப்பட்டன.

இதற்கு சாலையோர வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us