/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பத்து மடங்கு வரி உயர்வை கண்டித்து அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்

ADDED : மார் 26, 2025 11:57 PM
திருவொற்றியூர், திருவொற்றியூர், பெரியார் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நேற்று முன்தினம் வியாபாரிகளுக்கான சொத்து வரி, தொழில் வரி செலுத்துதல் மற்றும் சிறப்பு வரி வசூலிப்பு முகாம் நடந்தது.
இம்முகாமில், திருவொற்றியூர் பொது வர்த்தக சங்கத்தைச் சேர்ந்த வியாபாரிகள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், வரி செலுத்த வந்திருந்தனர். அப்போது, 500 ரூபாய் வசூல் செய்த வியாபாரியிடம், 2,500 ரூபாய் வரை வரி வசூலிக்கப்பட்டுள்ளது.
சிலருக்கு பத்து மடங்கு வரி உயர்வும் இருந்ததால், ஆத்திரமடைந்த வியாபாரிகள், அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
இது குறித்து, திருவொற்றியூர் பொது வர்த்தகர் சங்கத்தின் தலைவர் ராமசாமி கூறுகையில், ''தொழில் வரி, சொத்து வரி மற்றும் உரிமம் கட்டணம் உள்ளிட்டவை பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால், வியாபாரிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். இது குறித்து, திருவொற்றியூர் மண்டல குழு தலைவர், எம்.எல்.ஏ., விடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
முதல்வரிடம் மனு கொடுக்கவுள்ளோம். இதே நிலை நீடித்தால், வியாபாரிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக முடங்கும் அபாயம் உள்ளது,'' என்றார்.