/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொழில் உரிமம் பெற அவகாசம் வணிகர் சங்க பேரவை கோரிக்கை
/
தொழில் உரிமம் பெற அவகாசம் வணிகர் சங்க பேரவை கோரிக்கை
தொழில் உரிமம் பெற அவகாசம் வணிகர் சங்க பேரவை கோரிக்கை
தொழில் உரிமம் பெற அவகாசம் வணிகர் சங்க பேரவை கோரிக்கை
ADDED : ஏப் 05, 2025 12:12 AM
சென்னை,
தொழில் உரிமம் பெறுவதற்கான அவகாசத்தை, மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என, தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
பேரவை தலைவர் சவுந்தரராஜன் அறிக்கை:
மூன்று ஆண்டுகளுக்கு தொழில் உரிமம் பெற வேண்டும் என, தமிழக உள்ளாட்சி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பின், தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை கோரிக்கையை பரிசீலித்து, ஓராண்டு உரிமம் பெறலாம் என, உத்தரவு பிறபிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக, வணிகர்கள் தொழில் உரிமம் பெற தாமதம் ஏற்படுகிறது. உரிமம் பெற கடைசிநாள் மார்ச், 31ல் முடிந்தது. எனவே, தமிழக முதல்வர் இதில் கவனம் செலுத்தி, வணிக உரிமம் பெறுவதற்கான காலத்தை, மேலும் ஒரு மாதம் நீட்டித்து தர வேண்டும்.
தர்பூசணி பழங்கள் குறித்து தவறான தகவல்கள் வெளியிட்டு, வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மீது, உரிய நடவடிக்கை எடுத்து, தமிழக விவசாயிகளுக்கும், வணிகர்களுக்கும் அரசு உதவ வேண்டும்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.