/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூடுதல் பார்க்கிங் வியாபாரிகள் கோரிக்கை
/
கூடுதல் பார்க்கிங் வியாபாரிகள் கோரிக்கை
ADDED : அக் 13, 2025 05:09 AM
வண்ணாரப்பேட்டை: தி.நகருக்கு அடுத்து, வண்ணாரப்பேட்டை, எம்.சி.ரோடு, ஜி.ஏ.ரோடு மற்றும் புரசைவாக்கம் பகுதிகளில், துணிகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அவர்களின் பாதுகாப்பிற்காக, 200க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேநேரம், திடீரென முளைத்துள்ள தெருவோர கடைகளால், கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே, கூடுதல் பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என, வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோடு, ஜி.ஏ.ரோடு சுற்றுவட்டார வியாபாரிகள் நலச்சங்கத்தினர் கூறுகையில், 'வண்ணாரப்பேட்டையில் நடுரோட்டில் கடை போடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, கூடுதல் பார்க்கிங் வசதி செய்து தர வேண்டும்' என்றனர்.