ADDED : ஆக 28, 2026 05:32 PM
அ நிறம் | அளவு
அமைந்தகரை: மெட்ரோ நிர்வாகம் சார்பில் மறுசீரமைக்கப்பட்டுள்ள செனாய் நகர் திரு.வி.க., பூங்காவின் தரைத்தளத்திற்கு கீழ், தனியார் நிறுவனம் சார்பில், ‘லுா லுா ஹைப்பர் மார்க்கெட்’ எனும் சந்தை அமைக்கப்பட உள்ளது.
இந்த சந்தை செயல்பாட்டுக்கு வந்தால் சில்லறை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, அமைந்தகரை பொது வியாபாரிகள் சங்கத்தினர், நேற்று ஒரு நாள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
