/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீசாரை கண்டித்து வியாபாரிகள் மறியல்
/
போலீசாரை கண்டித்து வியாபாரிகள் மறியல்
ADDED : ஜூன் 26, 2025 11:59 PM
கோயம்பேடு,கோயம்பேடு காய்கறி சந்தையில் கடை வைத்துள்ளவர் சதீஷ், 40. இவரது கடையை, கடந்தாண்டு நெற்குன்றத்தைச் சேர்ந்த உத்தரவேல், 37, என்பவர், வாடகைக்கு எடுத்து நடத்தினார்.
அப்போது, இருவருக்கும் தகராறு ஏற்பட ஜாதியை கூறி அவதுாறாக பேசியதாக சதீஷ் மீது, கோயம்பேடு காவல் நிலையத்தில் உத்தரவேல் புகார் அளித்தார். இந்த வழக்கில், சதீஷ் முன் ஜாமின் பெறவில்லை.
நேற்று சதீஷை தேடி, வீட்டிற்கு சென்ற போலீசார், விசாரணைக்காக அவரது மனைவியை காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையறிந்த கோயம்பேடு சந்தை வியாபாரிகள் 50க்கும் மேற்பட்டோர், போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் மறியலில் ஈடுபட்டனர்.
கோயம்பேடு துணை கமிஷனர் அதிவீரபாண்டியன் பேச்சு நடத்தி, சதீஷின் மனைவியை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அதன் பின், வியாபாரிகள் கலைந்து சென்றனர்.