ADDED : ஆக 21, 2026 06:12 PM
அ நிறம் | அளவு
சென்னை: ஷெனாய்நகரில், ‘லுாலுா’ மார்க்கெட் திறப்பதை தடைசெய்யக்கோரி, வணிகர்கள் மற்றும் நாடார் சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, 1 லட்சம் சதுர அடியில் லுாலுா மார்க்கெட் திறக்கப்பட உள்ளது. திறப்புக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், நேற்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே வணிகர்கள் மற்றும் நாடார் சங்கங்கள் இணைந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒருங்கிணைப்பாளர் சந்திரன் ஜெயபால் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், திரளானோர் பங்கேற்றனர்.
அப்போது, லுாலுா மார்க்கெட் திறப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
